| இளம் பெண் மர்ம மரணம் Dinamalar
இளம் பெண் மர்ம மரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
01:09

கம்மாபுரம்:கம்மாபுரம் அருகே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்த இளம்பெண் உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 29. இவருக்கும் சின்னகோட்டிமுளை கருணாநிதி மகள் ஜெயந்தி, 27, என்பருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவரும், வி.சாத்தப்பாடி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை துாக்கில் தொங்கிய நிலையில் ஜெயந்தி இறந்தார். தகவலறிந்த கம்மாபுரம் போலீசார் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X