வீணாகிறது: சேதுக்கரை கடலில் மழை வெள்ளம்; தடுப்பணைகள் கட்டி தடுக்கலாமே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
01:12

சேதுக்கரை:சேதுக்கரையில் கடலும் ஆறும் சேரும் முகத்துவாரத்தில் கடந்த 10 நாட்களாக நான்கு பக்கத்தில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் முழுவதுமாக கடலில் வீணாகிறது.



மேற்கே உள்ள களரி கண்மாயை முறையாக துார்வாராத அதிகாரிகளால் வாரத்துக்கால்வாய் துார்ந்து போனது. கண்மாய் வழித்தடத்தில் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வெள்ள நீர் கருக்காத்தி, மேலமடை, கொம்பூதி, வேளானுார், பழஞ்சிறை, நத்தம், வைகை, ஆழ்வார்கூட்டம், பனையங்கால், பள்ளமோர்க்குளம், கீழத்தில்லையேந்தல் வழியாககொட்டகுடி ஆற்றில் கலந்து நேரடியாக சேதுக்கரை கழிமுகத்துவாரத்தில பெருவெள்ளமாக மாறி கடலில் வீணாகிறது.



கீழக்கரை தாலுகா மார்க்சிஸ்ட் பொறுப்பாளர் பழனிச்சாமி கூறியதாவது: கடந்த 2017 முதல் தற்போது வரை 8க்கும் மேற்பட்ட உயரம் குறைவான தடுப்பணைகளை அமைத்துள்ளனர்.சுற்று வட்டார கரைப்பகுதிகளை பலப்படுத்தாமல், பல இடங்களில் தடுப்பணை நீர் வெளியேறுகிறது. 2003க்கு பிறகு தற்போது அதிக மழை பெய்துள்ளது. 1 மீட்டருக்கும் குறைவாக தடுப்பணையின் உயரம் இருப்பதால் மழை நீரை சேமிக்க முடியவில்லை. எனவே வீணாகும் தண்ணீரை சேமிக்க 3 மீட்டர் உயரத்தில் தரமான தடுப்பணைகளை கட்ட வேண்டும், என்றார்.


மூழ்கிய தரைப்பாலம்:





திருப்புல்லாணியில் இருந்து கோரைக்குட்டம் செல்லும் கழிமுகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் மூழ்கிய நிலையில்வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்தீர்வு:






காஞ்சிரங்குடி, கோரைக்குட்டம், சேதுக்கரை, திருப்புல்லாணி ஆகிய 4 ஊராட்சிகளிலும் முறையான தீர்மானம் நிறைவேற்றி கழிமுகத்துவாரத்தில் உயரமான தடுப்பணையை ஏற்படுத்தினால், சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். எனவே மாவட்ட நிர்வாகம் வீணாகும் மழைநீரை, சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X