பரமக்குடியில் நாளை 'சக்ஸஸ் மந்த்ரா'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
01:15

ராமநாதபுரம்:தினமலர் சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2, மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் வெற்றி ரகசியம் கற்றுத்தரும் 'சக்ஸஸ் மந்த்ரா' எனும் ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சி பரமக்குடி தியாகி முத்துச்சாமி அரங்கத்தில் நாளை (டிச.,7) காலை 9:30 முதல் பகல் 12:30 வரை நடக்கிறது.



தினமலர் நாளிதழ் 'ஜெயித்துக் காட்டுவோம்' 'வழிகாட்டி' 'உங்களால் முடியும்' நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் ஆதரவை பெற்று வருகிறது.தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள 'சக்ஸஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0 நிகழ்ச்சியை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.



புதிய பாடத்திட்டம் தயாரித்த வல்லுநர் குழு, அனுபவம் வாய்ந்தகல்வியாளர்களை கொண்டு புதிய பாடத்திட்டத்தை எப்படி அணுகலாம், அதில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர்.,கோடு, அதை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வு நடக்கும் விதம் குறித்து ஆலோசனைகள்வழங்கப்படவுள்ளன.மாணவர்களுக்கு வாய்ப்பு: நுழைவுத் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தை பயன்படுத்துவது எப்படி, மனப்பாடம்செய்யாமலேயே புரிந்து கொள்வது எப்படி, சுவராஸ்யத்துடன் பாடங்களை படிப்பது எப்படி, 'கிரியேட்டிவ்' சிந்தனைகளை வளர்ப்பது எப்படி, தேர்வுக்கு முன் உடல் மற்றும் மனதை தயார்படுத்துவது எப்படி,கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துவது எப்படி என்பது போன்ற அனைத்துக்கும் இந்த நிகழ்ச்சியில் விடைகிடைக்கும்.



அனுமதி இலவசம்:






மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதிக்க, வெற்றி ரகசியங்களை அறிய உதவும் அற்புத நிகழ்ச்சியை, தவற விடாதீர்கள் மாணவர்களே.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X