ஆரம்பம் :இன்று முதல் வேட்புமனு தாக்கல் ; மதுரையில் இரு கட்டமாக தேர்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:08

மதுரை:மதுரையில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கிறது.

இம்மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலுள்ள 420 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளன. ஒரே நாளில் தேர்தல் பணியில் ஈடுபட கூடுதல் அலுவலர்கள் தேவை உள்ளிட்ட பிரச்னைகளால் இரு கட்டங்களாக நடத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சிபாரிசு செய்திருந்தது.



அதன்படி வைகையை மையமாக வைத்து வடக்கு, தெற்காக பிரித்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படஉள்ளன.மதுரை கிழக்கு, மேற்கு, மேலுார், கொட்டாம்பட்டி, அலங்காநல்லுார்,

வாடிப்பட்டி ஒன்றியங்களில் டிச., 27, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி,

டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி,செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஒன்றியங்களில் டிச., 30ல் தேர்தல்

நடக்கவுள்ளது.



இத்தேர்தலில் 420 ஊராட்சி தலைவர்கள், 3273 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 3930 பேர் தேர்வு

செய்யப்படவுள்ளனர். இதற்காக 2032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபட 16 ஆயிரம் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு விரைவில் பயிற்சியளிக்கப்

படவுள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வேட்பாளர்களிடம் அந்தந்த

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெறுவர். இதற்கான ஏற்பாடுகள்

செய்யப்பட்டுள்ளன, என்றார்.



ஊராட்சி தலைவருக்கு அந்தந்த ஒன்றியங்களில் உதவி தேர்தல் அலுவலரிடமும்(துணை பி.டி.ஓ.,), ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு அந்தந்த ஊராட்சி உதவியாளரிடமும், ஒன்றிய

கவுன்சிலருக்கு அந்தந்த ஒன்றிய உதவி தேர்தல் அதிகாரியிடமும்(பி.டி.ஒ., அல்லது

தாசில்தார்), மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு அந்தந்த ஒன்றிய உதவி இயக்குனர்

அந்தஸ்திலான தேர்தல் அதிகாரியிடமும் வேட்பு மனு செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X