| ரூ.42 லட்சத்தில் சீரமைத்த ஏரி்க்கரை மழையில் 'கரைகிறது' Dinamalar
ரூ.42 லட்சத்தில் சீரமைத்த ஏரி்க்கரை மழையில் 'கரைகிறது'
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:14

ஸ்ரீபெரும்புதுார்:குடிமராமத்து திட்டத்தில், 42 லட்சம் ரூபாயில் பலப்படுத்தப்பட்ட வல்லாரை ஏரிக்கரை, மழையில் கரைகிறது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லாரை ஏரி, குடிமராமத்து திட்டத்தில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரவு கால்வாய், மதகுகள் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையால், இந்த ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது.


இந்நிலையில், சீரமைக்கப்பட்ட ஏரியின் கரைகள், மழையால் கரைந்து வருகின்றன. இதனால், கிரா மக்கள், கரை பகுதியை, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.


இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:இரு மாதங்களுக்கு முன் தான், குடிமராமத்து திட்டத்தில், இந்த ஏரிக்கரை சீரமைக்கப்பட்டது. தரமற்ற பணிகளால், மழையில், ஏரிக்கரை கரைந்துள்ளது. சேதமான கரைகளை, உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X