| அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Dinamalar
அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:28

வாலாஜாபாத்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன.ஜூனியர் பிரிவில், முசரவாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவி வஜ்ஹத்பர்வீன் முதலிடம்; பாரதி, பிரியதர்ஷினி, பாலாஜி ஆகியோர் இண்டாவது இடம்; ஷியாமிளா, நதியா, தீபா, ராஜலட்சுமி, பேரறிவாளன் ஆகியோர், மூன்றாம் இடம் பெற்றனர்.அதேபோல, சீனியர் பிரிவில், வாலாஜாபாத் அரசு பள்ளி மாணவி லோக்கியா இரண்டாம் இடம் பிடித்தார். தமிழக அளவில், சிறப்பாக வெற்றி பெற்ற இக்குழுவிற்கு, பரிசு வழங்கப்பட்டது.


இலவச மருத்துவ முகாம்


உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.பொத்தேரி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், இதயம், சிறுநீரகம், பொது மருத்துவம், குழந்தைகள், பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை என, பல்வேறு சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரை வழங்கினர்.நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, 346 பேர் பங்கேற்றனர்.


மண்வள நாள் கடைப்பிடிப்பு


மாமல்லபுரம்: உலகம் முழுவதும், டிச., 5ம் தேதி, உலக மண்வள நாள் கடைபிடிக்கப்படுகிறது.இந்நாளான நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கத்தினர், அமைப்பினர், கடைபிடித்தனர்.இது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிந்து, விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


ஆஞ்சநேயருக்கு ஆண்டு விழா


காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறமுள்ள, திருவள்ளுவர் தெரு ஆஞ்சநேயர் கோவில், 31வது ஆண்டு விழா நடந்தது.மூலவருக்கு காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சந்தனகாப்பு ராஜ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X