| முக்கூர்த்தியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு Dinamalar
முக்கூர்த்தியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:40

கூடலுார்:'முக்கூர்த்தியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு காரணமாக வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தென் மாநிலங்களில், கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மூக்கூர்த்தி தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் மட்டும் வரையாடுகளை காணமுடியும். தொடர் பாதுகாப்பு நடவடிக்கையால், இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முக்கூர்த்தி தேசிய பூங்காவில், கடந்த, 2016ல் 480 ஆக இருந்த இதன் எண்ணிக்கை, தற்போது, 581 ஆக அதிகரித்துள்ளது.முதுமலை துணை இயக்குனர் செண்பகபிரியா கூறுகையில்,''புலிகள் பாதுகாப்பு போன்று, வரையாடு பாதுகாப்புக்கும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முக்கூர்த்தியில், அவைகளுக்கு தடையின்றி கிடைக்கும் தீவனங்கள், பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு காரணமாக, எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X