| வதந்தியை நம்ப வேண்டாம்: தேர்தல் நடக்கும் : கன்டோன்மென்ட் அதிகாரி தகவல் Dinamalar
வதந்தியை நம்ப வேண்டாம்: தேர்தல் நடக்கும் : கன்டோன்மென்ட் அதிகாரி தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:42

குன்னுார்:'குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும்; சமூக வலை தளங்களில் வரும் செய்திகளை மக்கள் நம்ப கூடாது,' என, அதிகாரி தெரிவித்தார்.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கன்டோன்மென்ட் பகுதிகளில், பாரத பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள, ஏழு வார்டுகளிலும் இம்மாதம் முதல் தேதியில் சுகாதார பணி துவங்கி,15ம் தேதி வரை நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக, இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, வரும், 7ம் தேதி நடை ஓட்டம் நடைபெற உள்ளது. அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள் குப்பை கிடங்கில் கொட்டப்படும்.கன்டோன்மென்ட் உறுப்பினர்களின் பதவிக்காலம், 2020 பிப்.,10ம் தேதியுடன் முடிகிறது. டில்லி இயக்குனர் ஜெனரல் அறிவுரைப்படி, கன்டோன்மென்ட் பொது தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இங்குள்ள, ஏழு வார்டுகளில், இரண்டாவது வார்டு 'ரிசர்வ்' வார்டாக உள்ளது. கடந்த முறை, 6, 7 ஆகிய வார்டுகள் பெண்கள் வார்டுகளாக இருந்தன. இந்த தேர்தலில், 1, 3, 4, மற்றும் 5 ஆகிய வார்டுகளில், பெண்களுக்கான, இரு வார்டுகள் குலுக்கல் முறையில், வரும், 12ம் தேதி தேர்வு செய்யப்படும்.இந்நிலையில், 'சில சமூக வலைதளங்களில் கன்டோன்மென்ட் பொது தேர்தல், ஒரு ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,' என, வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம். தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். தேர்தல் ஏற்பாடுகள் முடிந்தவுடன், இயக்குனர் ஜெனரல் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அங்கிருந்து, தேர்தல் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு, பூஜா பலிச்சா கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X