நாட்டிற்காக விளையாடியும் வருமானத்திற்கு வழியில்லை! ஆதங்கப்படுகிறார் தமிழக கேப்டன் சச்சின் சிவா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
05:08

சென்னை:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான, மாற்றுத்திறனாளிகளுக்கான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நவ., 28ம் தேதி துவங்கியது.



இதில், தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உட்பட, எட்டு மாநில அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த, 3ம் தேதி இறுதிப் போட்டி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் குஜராத் அணிகள் மோதின.போட்டியில், 'டாஸ்' வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதில், 19.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, குஜராத் அணி, 136 ரன்கள் எடுத்தது.இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி, 67 ரன்கள் மட்டுமே எடுத்து, 16.3வது ஓவரிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், 69 ரன்கள் வித்தியாசத்தில், குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.ஐந்து போட்டிகளில், இரண்டு அரை சதங்களுடன், அதிரடியாக, 180 ரன்கள் குவித்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழக அணி வீரர், சிவகுமார் இந்த தொடரின், தொடர் நாயகனாக, தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல, சிறந்த பவுலராக, ஈரோட்டைச் சேர்ந்த, மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டார். இவர், ஐந்து போட்டிகளில், 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இந்த தொடரில், தமிழக அணியை வழி நடத்திய, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் சிவா கூறுகையில், ''தோல்விக்கான காரணங்களை இனங்கண்டு, அடுத்தடுத்த போட்டிகளில், போதிய பயிற்சியுடன், வெற்றி பெறுவதற்கான, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,'' என்றார். அவருக்கு வாழ்த்துகள் சொல்லி பேசினோம்.



உங்களை பற்றி சொல்லுங்கள்?மதுரை மாவட்டம், தெப்பக்குளம் பகுதி, மருது பாண்டியர் நகரில் வசித்து வருகிறேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம். பள்ளிக்கூடத்தில், ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய ஆர்வத்தை பார்த்து, நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் அனுமதித்தனர். அதற்கு பின், உற்சாகத்துடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.


கிரிக்கெட் பயணம் தொடர்ந்தது எப்படி?


மதுரை, கே.கே.நகர், வக்பு வாரிய கல்லுாரியில், பி.காம்., படிக்கும்போது தான், மாற்றுத்திறனாளிகளுக்காக, தனியாக கிரிக்கெட் போட்டி இருப்பது தெரிந்தது. என்னுடைய திறமையை நிரூபித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அணியில் இடம் பிடித்தேன்.



கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டது எப்போது?கடந்த, 2013ல், தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் தொடரில், கர்நாடகாவை வீழ்த்தி, மதுரை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில், 'மேன் ஆப் தி சீரியஸ்' வென்றதால், எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது. அதன் பின், தற்போது வரை கேப்டனாக, தமிழக அணியை வழிநடத்தி வருகிறேன்.


இதுவரை செய்த சாதனைகள்?


காஷ்மீரில், 2017ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 64 பந்துகளில், 115 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தேன். அதேபோல், 2018ல், அசாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 16 பந்துகளில், 50 ரன்கள் எடுத்தேன். இந்த இரண்டு சாதனைகளையும், இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.தமிழக அணியில், ஆல் ரவுண்டராக, சிறப்பான முறையில் செயல்பட்டதால், இந்திய அணிக்கு, 2015ல் தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.


கிரிக்கெட் வாழ்க்கையை தொடருவதில் உள்ள சவால்கள்?


மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில், தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளோம். அதனால் கோப்பைகளும், பதக்கங்களும் தான் கிடைக்கிறதே தவிர, வருமானத்திற்கு ஒன்றும் வழியில்லை.சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில், விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு, மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. ஆனால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை.


சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?


எனக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாமல், கிரிக்கெட் விளையாடாமல் வேறு வேலைக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் மாதந்தோறும், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கிரிக்கெட்டை தொடர வழி வகை செய்து கொண்டு இருக்கிறார்.அதேபோல, எங்கள் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் கண்ணா, ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து உறுதுணையாக இருக்கிறார். அதனால், என்னால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது.


மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான தடைகளை கடப்பது எப்படி?


மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் நிலைமை, தற்போது வரை கவலைக்கிடமாகவே இருக்கிறது. மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதை போல, எங்களுக்கு நன்கொடையாளர்கள் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள், நிறைய போட்டிகளை நடத்தி, நன்கொடை மற்றும் வேலை வாய்ப்பை வழங்கலாம்.கிரிக்கெட்டில் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கி உதவி செய்ய வேண்டும்.அதேபோல, பி.சி.சி.ஐ., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் போன்றவை, மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தை அங்கீகரித்து, உதவி செய்தால், இதர கிரிக்கெட் வீரர்களை போல், எங்கள் வாழ்க்கையும் மாறிவிடும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X