நகரில் உலா வந்த முள்ளம்பன்றி நாய்களுடன் போரிட்டு தப்பியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
05:16

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் உணவகத்தில் தஞ்சம் புகுந்த முள்ளம் பன்றியை வனத்துறையினர் மீட்டனர்.பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில், நேற்று காலை வித்தியாசமான பிராணி ஒன்று ஓடியுள்ளது. அந்த பிராணியை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்தின. உடலில் இருந்து முட்களை பயங்கரமாக விரித்து நாய்களை பயமுறுத்தியது.அப்போது தான், அது முள்ளம்பன்றி என மக்களுக்கு தெரிந்துள்ளது. நாய்களால் துரத்தப்பட்ட முள்ளம்பன்றி, தன்னைக் காத்துக் கொள்ள அருகில் இருந்த உணவகத்துள் நுழைந்து, கிரைண்டர் மறைவில் தஞ்சம் அடைந்தது. தகவல் அறிந்து, முள்ளம்பன்றியை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் நுாற்றுக்கணக்கானவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முள்ளம்பன்றியை பிடிக்க முயன்றால், முட்கள் குத்தி பாதிப்பு ஏற்படலாம். அல்லது, பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான முள்ளம்பன்றிக்கு காயம் ஏற்படலாம் என்பதால் வனத்துறை அலுவலகத்துக்கு மக்கள் தகவல் அளித்தனர்.அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், பிளாஸ்டிக் பக்கெட் கொண்டு முள்ளம்பன்றியை மீட்டனர். முள்ளம்பன்றி, வனப்பகுதிக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக்கூடிய முள்ளம்பன்றி, போக்குவரத்து நெரிசல் மிக்க நகரப்பகுதிக்கு எப்படி வந்தது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருந்தது.வனத்துறையினர் கூறியதாவது: தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், கொறிக்கும் தன்மையுள்ள விலங்கு. இலங்கை, மற்றும் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகுபைன் எனப் பொதுவாக அழைக்கப்படும். முள்ளம்பன்றியை பிற விலங்குகள் தொந்தரவு செய்யும் போது, முதலில் தனது முட்களை உயர்த்தி நிமிர்த்திக் கொள்வதோடு, வாலிலுள்ள ஒலியெழுப்பும் முட்களை கொண்டு கிலுகிலுப்பை போன்ற எச்சரிக்கை ஒலி எழுப்பும்.அதையும் மீறி நெருங்கவோ, தாக்கவோ முயன்றால், முட்களால் தாக்கும். புலிகள், சிறுத்தைகள் போன்ற பெரிய விலங்குகள் கூட முள்ளம்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பது உண்டு. இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X