கைவிட்டது கைத்தறி! பருவமழையால் நெசவாளர்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
05:19

பொள்ளாச்சி:வடகிழக்கு பருவமழை, வழக்கத்துக்கு மாறாக பலமாக பெய்வதால், பொள்ளாச்சி காட்டம்பட்டி பகுதியில், கைத்தறி சேலை நெசவில் ஈடு பட்டுள்ள நெசவாளர் குடும்பங்கள் வருமானம் இன்றி தவிக்கின்றன.பொள்ளாச்சி, நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில், 2,500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வசிக்கின்றனர்.


இக்குடும்பங்களை சேர்ந்தவர்கள், பரம்பரையாக கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், 2,200 கைத்தறிகள் இயங்கி வருகின்றன.மொத்த வியாபாரிகள் மற்றும் காட்டம்பட்டியில் செயல்படும், அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து, நுால் மற்றும் டிசைன்களை பெற்று, கைத்தறி காட்டன், பட்டு சேலை ரகங்களை நெசவு செய்து கொடுக்கின்றனர்.இதற்கு, நெசவு கூலியாக சேலை வடிவமைப்பை பொருத்து, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை பெறுகின்றனர்.ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் மட்டும், நெசவு தொழிலில் ஈடுபடாமல் ஓய்வு எடுத்துக்கொள்கின்றனர். மழைக்கு முன்பாக, ஒவ்வொரு குடும்பத்தினரும் வாரத்துக்கு மூன்று முதல், நான்கு சேலைகள் நெசவு செய்து கொடுத்தனர்.இதன்மூலம், மாதத்துக்கு, 50 ஆயிரம் சேலைகள் நெசவு செய்து, அதற்கான வருமானத்தை பெற்று வந்தனர்.பொதுவாக, மழை காலங்களில் நெசவு செய்வது இயலாத காரியம். அடிக்கடி நுால் துண்டித்துவிடும். அவசரம் கருதி, நெசவில் ஈடுபட்டாலும், சேலைகளின் தரம் குறைந்துவிடும்.கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஈரப்பதமான கால நிலையால், கைத்தறி நெசவுத்தொழில் பாதிப்படைந்துள்ளது. அடிக்கடி நுால் துண்டிப்பு ஏற்பட்டு, சேலை நெசவு பெரும்பாலும் முடங்கி, நெசவாளர்கள் வேலை இழந்துள்ளனர்.இதனால், கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்யும் சேலையின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. தொடர் மழையால், மாதக்கணக்கில் தொழில் இழந்து, வருமானத்தையும் இழந்த தொழிலாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் கடன் பெற்று, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.இந்நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கூட்டுறவு சங்கங்கள் கடனுதவி வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.இன்றைய நிலையில், கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கமும் குறைந்த அளவே, சேலை, சுடிதார் ரகங்களை கொள்முதல் செய்து வருகிறது.தவிர்க்க முடியாத பாதிப்புகைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது:காட்டம்பட்டி, நெகமம், குள்ளக்காபாளையம், செஞ்சேரிபுத்துார், அய்யம்பாளையம், பூரண்டாம்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், கைத்தறி நெசவு செய்கின்றனர்.இது தவிர, பொள்ளாச்சி தாலுகாவில் குஞ்சிபாளையம், நாயக்கன்பாளையம், ஜலத்துார் பகுதியிலும், கைத்தறி நெசவு தொழில் உள்ளது. அனைத்து பகுதியிலும், கைத்தறி நெசவு மழையால் பாதித்துள்ளது.இதனால், நெசவாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதை, தவிர்க்க முடியாது. மழையின் தீவிரமும், ஈரப்பதமான சூழலும் மாறினால் மட்டுமே கைத்தறி நெசவு தீவிரமடையும். அதுவரை,இப்பிரச்னை நீடிக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X