தக்காளிக்கு கொடி கட்டும் தொழில்நுட்பம் மழை காலத்திலும் தரம் குறைவதில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
05:50

உடுமலை:மழைக்காலத்தில் தக்காளியின் தரம் பாதிக்கப்படுவதை தடுக்க, கொடிக்கட்டுதல் முறையை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.உடுமலை பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார், ஆண்டியக்கவுண்டனுார், கண்ணமநாயக்கனுார் உட்பட பகுதிகளில், ஆண்டு முழுவதும் கிணற்று பாசனத்தில், தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.ஒரு பருவத்துக்கு ஆயிரம் எக்டருக்கும் குறைவில்லாமல் நடவு செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 10 டன் வரை மகசூல் எடுக்கின்றனர்.தற்போது, நாட்டு ரகங்களை தவிர்த்து, வீரிய ஒட்டு ரகங்களே சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும், மழைக்காலத்தில், தரமான தக்காளியை உற்பத்தி செய்ய கொடி வகையை தேர்வு செய்கின்றனர்.இவ்வகையில், 'கொடிக்கட்டுதல்' என்ற தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில், சிறிய குச்சிகள் நடப்பட்டு, அதில் கம்பிகள் கட்டப்படுகிறது.செடியில் வளரும் ஒவ்வொரு கிளையும் சணல் கயிறு மூலம், கம்பிகளுடன் இணைத்து கட்டப்படுகிறது. இதனால், கிளைகள் தரையில் படர்வது தடுக்கப்பட்டு, மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது.காய்களின் அதிகப்படியான எடை மற்றும் காற்றினால் கிளைகள் உடைந்து விடாமல் இந்த தொழில்நுட்பம் தடுக்கிறது. கிளைகளை கொடியில் கட்டிவிடுவதால் செடிகளின் வளர்ச்சியும், காய்களின் தரமும் அதிகரிக்கிறது. சந்தைகளில், விலையும் கூடுதலாக கிடைக்கிறது.விவசாயிகள் கூறியதாவது:வீரிய ஒட்டு ரக கொடி வகை தக்காளி ரகத்தை கொடிக்கட்டுதல் முறையில் தான் நடவு செய்ய வேண்டும். குச்சிகள் ஊன்றுதல், மட்டை அமைத்தல் கம்பிகள் மற்றும் சணல் கட்டுதல் என கூடுதல் செலவாகிறது. செலவுக்கு ஏற்ப வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வகை தக்காளி ரகங்களில், இரண்டு மாதங்கள் வரை கூடுதலாக காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு, 20 டன் வரை காய்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X