சம்பளம் வழங்கி ஆறு மாதங்களாச்சு! துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
06:01

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் துப்புரவு பணியாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் பகுதி நேரமாக துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.துவக்கப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளமாக, 1,000 ரூபாயும், துப்புரவு பொருட்களுக்கு, 300 ரூபாயும் வழங்கப்படுகிறது.நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாத சம்பளமாக, 1,000 ரூபாயும், துப்புரவு பொருட்களுக்கு, 500 ரூபாயும் வழங்கப்படுகிறது. இவர்கள் சம்பளம் கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:பள்ளிக்கூடங்களில், மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறோம். அந்த சம்பளமும் சரியாக தருவதில்லை. ஆறு மாதங்களாக சம்பளம் தரவில்லை.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டால், ஒன்றிய அலுவலகத்திலிருந்து சம்பளம் வரவில்லை என்கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்தில் உள்ளோம். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து சம்பளம் தருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் சம்பளம் வாங்காமலே, ஆறுமாதங்களாக பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X