| மேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயிரி தெளிப்பு Dinamalar
மேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயிரி தெளிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2019
09:34

மேட்டூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மேட்டூர் அணை, 16 கண் மதகு குட்டையில், பாசி படலத்தை அழிக்க, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையினர், நுண்ணுயிரி தெளித்தனர்.


மேட்டூர் அணை உபரிநீர் வெளியேறும், 16 கண் மதகு காவிரியாற்றில், ஏராளமான குட்டைகள் உள்ளன. அதில், அணையில் திறக்கப்பட்ட உபரிநீர், நீண்ட நாளாக தேங்கியுள்ளது. சில நாளாக, அந்த நீர், பச்சை நிறத்தில், பாசி படலம் போல் மாறி, துர்நாற்றம் வீசுவதால், கரையோரமுள்ள சேலம் கேம்ப், தங்கமாபுரிபட்டணம் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், துர்நாற்றம் வீசும் பாசி படலத்தை அகற்ற, 'பேசிலஸ் சப்டெயிலிங்' நுண்ணியிரி, குட்டையில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 நாள், குட்டைகளில் தேங்கியுள்ள நீரில், நுண்ணுயிரி தெளிக்கப்படும். இதன்மூலம், நாற்றம் குறைவதோடு, பாசிபடலம் அழிந்து விடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியாக, முழு கொள்ளளவில் இருந்தது. வினாடிக்கு, 8,500 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X