30 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு? தமிழக அரசு நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
12:34

தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ள நிலையில், 30 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க, விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர், ஆசிரியர் விகிதப்படி, உபரி மற்றும் பற்றாக்குறை குறித்து கணக்கெடுப்பது வழக்கம். இதில், தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய மனிதவளத்துறையிடமிருந்து நிதி பெறும் போது, உபரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து, ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை தடை எழுப்பப்படுகிறது. இதை குறைக்க, வேறு பணிகளுக்கு மாற்றுதல், மாணவர் ஆசிரியர் விகிதம் குறைத்தல் என, பல நடவடிக்கை எடுத்தும், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை.


கடந்த சில வாரங்களுக்கு முன், '30 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றால், சலுகைகள் வழங்கப்படும்' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால், ஆசிரியர்கள் எவரும் விருப்ப ஓய்வை விரும்புவதில்லை. இதனால், 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2011 முதல், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதை கவனத்தில் கொள்ளாமல், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போதே ஆசிரியர்கள் உபரியாகத்தான் இருந்தனர். இதை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். தற்போது முழுக்க முழுக்க மாணவர் எண்ணிக்கை சரிந்ததால் தான் உபரி பணியிடம் வந்துவிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். கணக்கில்லாமல் நியமனத்துக்கு வகை செய்த அதிகாரிகளுக்கு நடவடிக்கையோ, கட்டாய ஓய்வோ கிடையாது. ஆனால், அதற்கு முன்பிருந்து, ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடுகின்றனர். அரசுக்கு எதிராக போராடியதால் தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால், ஆசிரியர்களிடையே அதிர்ச்சி எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


பணி செய்யாத பணியாளர்களுக்கு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம், தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அலுவலகங்களில், பணிபுரிபவர்களுக்கு, கடந்த 29 ல், குறிப்பாணை அனுப்பியுள்ளது.


அதில், கூறியிருப்பதாவது: கட்டாய ஓய்வுக்காக, டிச., 31ல் முடிவடையும் ஆண்டுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய அ, ஆ, இ பிரிவு அலுவலர்களில், 50 வயது முடிவடையும் (அடிப்படை பணியாளர்களுக்கு 55 வயது) அல்லது 30 ஆண்டு பணி முடிவடைதல், இவற்றில் முதலில் எது முதலில் வருகிறதோ, அவ்வலுவலர் ஆய்வு செய்யப்பட வேண்டியவர். இவர்களின் பதிவேட்டை, பதிவுறு தாட்களை டிச., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பணிகளை சரிவர செய்யாத பணியாளர்களை கட்டாய ஓய்வு வழங்குவதற்காக, இக்குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்பு படுத்தி, ஆசிரியர்களுக்கும் கட்டாய ஓய்வு வழங்கப்பட உள்ளது என தகவல் பரவியுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X