தலைவர்கள் படம் குறித்த பிரச்னை சமாதான கூட்டத்தில் சுமூக முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
02:12

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைவர்கள் படம் வைப்பது தொடர்பான பிரச்னைக்கு, அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.



விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி பெற்ற, தனியார் பி.எட்., கல்லுாரி மாணவர்களில் சிலர், பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களை நினைவு பரிசாக வழங்கினர். இது குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.இதனால், சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியார் படத்தையும், பள்ளியில் வைக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.



இது தொடர்பாக வி.சி., மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் பள்ளிக்கு வந்து, அம்பேத்கர் படத்தை அகற்றக் கூடாது என பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். அதுபோல், ராமசாமி படையாட்சியார் படத்தை வைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.



தகவலறிந்த சப் கலெக்டர் பிரவீன்குமார், இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி, விருத்தாசலத்தில் தாசில்தார் கவியரசு தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், டி.இ.ஓ., பாண்டிதுரை, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், பா.ம.க., நிர்வாகிகள் அசோக்குமார், கார்த்திகேயன், வன்னிர் சங்கம் சிங்காரவேல், வி.சி., நிர்வாகிகள் அய்யாயிரம், முருகன், அருள், இந்திய குடியரசு கட்சி கதிர்வேல், மங்காபிள்ளை, பகுஜன் சமாஜ் அருட்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.



அதில், அரசு விதிகளின்படி, அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியார் படத்தை அரசு அனுமதி பெற்று வைக்க பரிந்துரை செய்வது என, இரு தரப்பினர் ஒத்துழைப்புடன் முடிவு செய்யப்பட்டது. இதனால், அரசு பள்ளியில் தலைவர்களின் படம் குறித்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X