'மெட்ரோ', 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் பாதிக்குமா?பாலம் வடிவம் மாறுவதால் எழுந்தது கேள்வி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 டிச
2019
06:22
பதிவு செய்த நாள்
டிச 08,2019 03:46

.கோவை:உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் வடிவமைப்பை மாற்றுவதால், 'மெட்ரோ' ரயில் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு பாதிப்பு வருமா என, அந்தந்த துறைகளில் விசாரித்து, தடையின்மை சான்று பெற்று, தாக்கல் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


உக்கடம் - கரும்புக்கடை வரை, ரூ.121.82 கோடியில், மேம்பாலம் கட்டுவதற்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை, 1.34 கி.மீ., நீளத்துக்கு நான்கு வழி ஓடுதளம்; உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை, 345 மீ., நீளம் இரு வழி இறங்கு ஓடுதளம்; டவுன்ஹால் முதல் உக்கடம் சந்திப்பு வரை, 284 மீ., நீளமுள்ள இரு வழி ஏறுதளம் என, 1.97 கி.மீ., நீளத்துக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.ஆரம்பத்தில், இதன்படி, வடிவமைப்பு செய் யப்பட்டது. 'கரும்புக்கடை வரை பாலம் கட்டினால் பயனில்லை; ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க வேண்டும்.


சுங்கம் பகுதியில் இருந்து வாலாங்குளம் பைபாஸில் வருவோர் பாலத்தை பயன்படுத்த முடியாது. அதற்கேற்ப வடிவமைப்பு மாற்ற வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.அதையேற்று, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கவும், வாலாங்குளத்தில் இருந்து வாகனங்களில் வருவோர் பாலத்தில் ஏறுவதற்கு தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைப்பு மாற்றப்பட்டது.


டவுன்ஹாலில் இருந்து வருவோர், நாஸ் தியேட்டர் முன்பிருந்து பாலத்தில் ஏறும் வகையில் முதலில் வடிவமைப்பு செய்யப்பட்டு இருந்தது. தற்போது, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து, வாலாங்குளத்துக்கு திரும்பும்போது, பாலத்தில் ஏறும் வகையில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய வடிவமைப்புக்கும், கூடுதல் மதிப்பீட்டு தொகைக்கும் அரசின் ஒப்புதலுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை கருத்துரு அனுப்பியது.


கோவையில், 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த இருப்பதாக, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 'பாலத்தின் வடிவமைப்பு மாற்றுவதால், 'மெட்ரோ' ரயில் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது' என, 'மெட்ரோ' ரயில் நிர்வாகத்திடம் இருந்தும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு பாதிப்பு வராது என, மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்தும் தடையின்மை சான்று பெற்று, சமர்ப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அச்சான்று பெறுவதற்கான முயற்சிகளில், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


மே வரையே வேலை!தற்போது, துாண்களுக்கு இடையே 'டெக்' அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இது, வரும், 2020 மே மாதத்தில் நிறைவடைந்து விடும். பேரூர் பைபாஸில், 'டோபிகானா' மற்றும் துப்புரவு தொழிலாளர் குடியிருப்புகளை மாநகராட்சி காலி செய்து கொடுத்தால் மட்டுமே, பணிகளை அடுத்த கட்டமாக தொடர முடியும். மாநகராட்சி நிர்வாகம் தாமதித்து வருவதால், உக்கடம் பாலமும் அந்தரத்தில் நிற்குமோ என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X