பாரதியார் பல்கலை வளாகத்தில் விஷம் வைத்து நாய்கள் கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
04:09

வடவள்ளி:கோவை பாரதியார் பல்கலையில், 9 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக, துணைவேந்தரிடம், தேசிய விலங்குகள் நலவாரியத்தினர் புகார் அளித்துள்ளனர்.கோவை பாரதியார் பல்கலை, 1,200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம், 9 நாய்கள் மர்மமான முறையில் இறந்தன. தேசிய விலங்குகள் நல வாரியத்தினர், அங்கு ஆய்வு செய்தனர்.இறந்த நாய்களை பரிசோதனை செய்ததில், உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது. நேற்று மாலை, பல்கலை துணைவேந்தர் காளிராஜை சந்தித்து, நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.தேசிய விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த கல்பனா கூறுகையில், ''பாரதியார் பல்கலையில், கடந்த ஓராண்டாக, நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்படுகிறது. கடந்த, 6ம் தேதி, 9 நாய்களுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலையில், தொடர்ந்து, சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. கடத்தல்காரர்களுக்கு, நாய்கள் இடையூறாக இருந்திருக்கலாம். அதனால், நாய்களை, விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம். துணைவேந்தரிடம் புகார் அளித்துள்ளோம். உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X