பருவமழை தீவிரம் பயிர்கள் செழிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
04:52

விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை, டிச. 8-

உடுமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக, தானிய பயிர்கள் சாகுபடியில் செடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை தேவனுார்புதுார், பாப்பனுாத்து, கொடிங்கியம், சாளையூர், எரிசனம்பட்டி, ராவணாபுரம், வளையபாளையம், ஆண்டியூர், செல்லப்பம்பாளையம், புங்கமுத்துார், உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில், பருவமழையை அடிப்படையாக கொண்டு தானியப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.மானாவாரி அடிப்படையில், தற்போது, உளுந்து, தட்டைபயறு, கொள்ளு, சோளம், அவரை உட்பட தானியப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பரவலாக பெய்து வரும், பருவமழையால், சாகுபடியில் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.விவசாயிகள் கூறியதாவது: நீர்ப்பாசனம் இல்லாத, செம்மண் நிலங்களில், தானியப்பயிர்களே வருவாய் அளித்து வருகின்றன. இம்முறை, செடிகளின் வளர்ச்சி தருணத்தில், மழை பெய்து வருவதால், விளைச்சல் ஒரளவு இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து சற்று தள்ளியுள்ள, விளைநிலங்களிலும், காட்டுப்பன்றிகள், தானியப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதே போல், மயில்களாலும், பாதிப்பு தொடர்கதையாக இருக்கிறது. இப்பிரச்னைக்கு, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, சாகுபடியில் நஷ்டத்தை தவிர்க்க உதவ வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X