மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு நஷ்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
05:01

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள், மழையால் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி செய்து, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். நடப்பாண்டு பல ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் பயிரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, தோட்டங்களில் மழைநீர் தேங்கியதால், பயிர்கள் அழுகி வருகின்றது.மேலும், பல இடங்களில் ஓடையை ஒட்டி, தோட்டங்களில், மழை நீர் அடித்து சென்றதில், காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளன. தவிர, தோட்டங்களில் சேறு நிறைந்துள்ளதால், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, நெடுகுளா, மிளிதேன், சுள்ளிகூடு மற்றும் கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில், சேதம் அதிகரித்துள்ளதால், பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயி சில்லபாபு கூறுகையில்,''மழை காரணமாக, பல ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி தோட்டம் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். மழை ஓய்ந்துள்ள நிலையில், இனிவரும் நாட்களில் பனிப்பொழிவு இருக்குமானால், எஞ்சிய பயிர்களும் பாதிக்கும் என்பதால், கூடுதல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, அரசு பயிர் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X