மரங்கள் வளர்த்தும் 'கரன்சி' எண்ணலாம்! விவசாயிகளுக்கு வழிகாட்டும் வனக்கல்லூரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
05:40

கோவை;மரம் வளர்ப்பதன் மூலமாக, விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கு, கோவை வனக்கல்லுாரி ஆராய்ச்சி பண்ணை, 'துல்லிய பண்ணை சாகுபடி தொழில்நுட்ப திட்டம்' செயல்படுத்தி வருகிறது.


வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் தொடர்பாக, விவசாயிகளிடம் உள்ள விழிப்புணர்வு, மரம் வளர்ப்பில் இருப்பதில்லை. மர வளர்ப்பு மூலமும் வருவாய் ஈட்ட முடியும் என்பதை விவசாயிகளுக்கு நேரடியாக விளக்கும் வகையில், வனக்கல்லுாரி ஆராய்ச்சி பண்ணை வளாகத்தில், 20 ஏக்கர் பரப்பில் துல்லிய பண்ணை சாகுபடி தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.வனக்கல்லுாரி காடு வளர்ப்புத்துறை தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:வேகமாக வளரும் உள்நாட்டு மரங்களை ஆராய்ச்சி செய்து வருகிறோம். நல்ல தரமான தாய் மரத்தில் இருந்து விதை எடுத்து, 'குளோன்' மூலம் கன்று உருவாக்கி, சொட்டு நீர் மூலம் தண்ணீர் ஊற்றி, உரங்கள் இட்டு வளர்க்கிறோம்.நாங்கள் உருவாக்கியுள்ள, 16 வகை மரங்களை, 20 ஏக்கரில் நட்டு மாதிரி பண்ணை ஏற்படுத்தியுள்ளோம்.


காகித துறைக்கு இரண்டு ஆண்டுகளிலும், மரச்சாமான்கள் தயாரிக்கும் துறைக்கு, ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் வெட்டலாம். ஒரு மரத்துக்கு, 3ல் இருந்து, 18 லிட்டர் தண்ணீர், வளர்ச்சிக்கு ஏற்ப சொட்டு நீர் மூலம் ஊற்றினால் போதும்.ஒரு ஏக்கரில், 444 மரங்கள் நட்டுள்ளோம். இடைப்பட்ட பரப்பில், ஊடு பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம். ஒரு ஏக்கருக்கு மரம் மூலம் மட்டும், 35 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டலாம். நடவு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்ப உதவியும் வனக்கல்லுாரியில் வழங்கப்படுகிறது. மாதிரி பண்ணையை விவசாயிகள் பார்வையிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X