நடிகர் விஜயகாந்த் மகனுக்கு கோவையில் மணப்பெண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
05:43

பெ.நா.பாளையம்,:நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், விரைவில் கோவை மணப்பெண்ணை மணக்கிறார்.நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும், கோவை பெரியநாயக்கன்பாளையம், ரயில்வே பீடர் ரோட்டில் வசிக்கும் இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இளங்கோ, முத்திரைத்தாள் விற்பனையாளராக உள்ளார். 'தினமலர்' நாளிதழ் உட்பட பல்வேறு தினசரி, மாத, வார இதழ்களின் ஏஜன்டாகவும் இருந்தவர். இவரது குடும்பம், கோவையை பூர்விகமாக கொண்டது.விஜயகாந்த் குடும்பம், மதுரையை பூர்விகமாக கொண்டது. இரு குடும்பத்தினரும் நாயுடு வகுப்பை சேர்ந்தவர்கள். விஜயபிரபாகன், கீர்த்தனா ஆகியோரது திருமணம் உறுதி செய்யும் விழா, நேற்று முன்தினம், கோவை பீளமேட்டில் உள்ள மணப்பெண் உறவினர் வீட்டில், எளிய முறையில் நடந்தது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சுதீஷ், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விஜயகாந்த் பங்கேற்கவில்லை. விஜயபிரபாகரன் தே.மு.தி.க., கட்சி நிர்வாகம், தனது தந்தை விஜயகாந்த் நடத்தி வந்த தொழில்களை நிர்வகித்து வருகிறார்.மணப்பெண்ணின் தந்தை இளங்கோ கூறுகையில்,''திருமண நிச்சயார்த்தம் நடக்கும் முன், பூவைத்தல் என்ற திருமணம் உறுதி செய்யும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அந்த நிகழ்ச்சிதான் நேற்று முன்தினம் பீளமேட்டில் நடந்தது. திருமணம் வைகாசி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-201906:51:25 IST Report Abuse
Elanchezhian வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X