ஏப்ரல் முதல் புதிய ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் அமல் காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
06:07

புதுச்சேரி:ரூ.5 கோடி வர்த்தகம் செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள் இனி காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது என ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் வழிமுறையை அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக பங்குதாரர்களின் கருத்து கேட்புக் கூட்டம் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.



ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் ராம்குமார் கருத்து கேட்பு கூட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் விஜேந்திரன், தேவநாதன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடந்த கருத்து கேட்பு முகாமில் வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி., ஆலோசகர், பட்டய கணக்காளர்கள், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.



கருத்துகேட்பு கூட்டத்தில் ஜி.எஸ்.டி., நிபுணர்கள் முன் வைத்த கருத்துகள்:மிகப்பெரிய வரி சீர்த்திருத்தமான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி நடைமுறைப்படுத்தப் பட்டு நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அண்மையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யப்படும் முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் எளிதாக்கப்பட உள்ளது.



அதன்படி ரூ.5 கோடி வர்த்தகம் செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள் இனி காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். அதுவும் காலாண்டு முடிந்து 25வது நாளுக்குள் தாக்கல் செய்தால் போதும். இதற்காக 'சஹாஜ்' மற்றும் 'சுகம்' ஆகிய இரு படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குறைவான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும்.



வரித்தாக்கல் படிவம் இரு பகுதிகளை கொண்டிருக்கும். ஒரு பகுதி கட்டத்தில் வெளியே செல்லும் சப்ளை விவரங்களை குறிப்பிட வேண்டும். இரண்டாவது கட்டத்தில் இன்வாய்ஸ்கள் மீதான இன்புட் டாக்ஸ் கிரேட்டை குறிப்பிட வேண்டும். இன்வாய்ஸ்களை விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக பதிவேற்றலாம். அவற்றை வாங்குபவர்கள் பார்த்து இன்புட் டாக்ஸ் கிரெடிட் கோரலாம். இதன் மூலம் இன்வாய்ஸ் பதிவேற்றப்படும் போதே தாக்கல் தானியங்கி மயமாக்கப் படும்.



புதிய ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தொடர்பாக https://demoofflinettool.gst. gov.in/instructions என்ற இணைய தளத்தில் பயிற்சிக்காக தாக்கல் செய்து பார்க்கலாம். ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X