ஏன் இந்த கொலைவெறி ண பராமரிப்பு பெயரில் ரயில்கள் நிறுத்தம் ண பயணிகளை பாடாய்படுத்தும் ரயில்வே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 டிச
2019
06:18
பதிவு செய்த நாள்
டிச 08,2019 06:16

ஸ்ரீவில்லிபுத்துார்.

தென்மாவட்டங்களிலிருந்து இயக்கபடும் ரயில்கள் பராமரிப்பு பெயரில் அடிக்கடி பகுதி, பகுதியாக ரத்து செய்யப்படுவதால் ரயிலை நம்பி வெளியூருக்கு போகவும், வரவும் முடியாமல் பயணிகள் விரக்தியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் தொழில் ரீதியாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். மதுரை, ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கும் பயணித்து வருகின்றனர்.

பஸ்கட்டணத்தை விட 3 மடங்கு குறைவாக இருப்பதாலும் 160 கி.மீ., துாரத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்தால் மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்பதாலும் ரயில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தனியார் மற்றும்

அரசு அலுவலர்கள்,

கல்லுாரி மாணவர்களும் அதிகம் பயனடைந்து

வருகின்றனர்.

மதுரை-செங்கோட்டை, திருநெல்வேலி -ஈரோடு, நாகர்கோவில்-கோவை, தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, பாலக்காடு-திருசெந்துார், மதுரை-ராமேஸ்வரம்ரயில்களை நம்பி தினமும் பல ஆயிரம்

பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் பெயரில் பல்வேறு ரயில்கள் அடிக்கடி பகுதி,பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் ஏமாற்றம், நேரவிரயம், கூடுதல் செலவுகளுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக நாகர்கோவிலிருந்து கோவைக்கு ஒரே ஒரு முன்பதிவு இல்லா ரயில் மட்டும்தான் உள்ளது.

இந்த ரயிலும் அடிக்கடி திண்டுக்கல்-விருதுநகர் இடையே ரத்து செய்யபடுவதால் விருதுநகர் மக்கள் எந்த ஊருக்கும் செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.

இனியாவது மக்கள் பாதிக்காதவாறு பராமரிப்பு பணிகள் செய்து ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ரயிலே வேண்டாம்

தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் அடிக்கடி, பகுதி, பகுதியாக ரத்து செய்யபடுவதால் நினைத்த ஊருக்கு செல்லமுடியவில்லை. பாதி வழியில் இறங்கி பஸ்சில் தான் செல்லவேண்டியுள்ளது. மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும்நிலை உள்ளது. தொழில் ரீதியாக மதுரைக்கு கூட சென்று திரும்பமுடியலை. இதனால் ரயிலே வேண்டாம் என பஸ்சில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-ராஜசேகர், ஸ்ரீவில்லிபுத்துார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X