நாளை துவக்கம்! வேட்புமனு தாக்கல்: கட்சியினர் 'சுறுசுறு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 டிச
2019
06:42
பதிவு செய்த நாள்
டிச 08,2019 06:40

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியாகியுள்ள நிலையில், இம்முறை தேர்தல் நடந்துவிடும் என்ற நம்பிக்கையுடன், கட்சியினர் களமிறங்க தயாராகி விட்டனர்.


தமிழக உள்ளாட்சி அமைப்புகள், 2016 அக்., 25 முதல், தனி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டு முறை தேர்தல் ரத்தான நிலையில், மீண்டும் நேற்று அறிவிப்பு வெளி

யாகியுள்ளது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 வரை, மனுத்தாக்கல் நடக்கும்.


ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் நடக்கும். ஒன்றிய அலுவலகங்களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மனுத்தாக்கல் நடக்க உள்ளது.


தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்கள், நாளை முதல் மனுத்தாக்கலை துவக்குகின்றனர். வரும், 16ம் தேதி வரை மனுத்தாக்கல் நடக்கும். மனுக்கள் பரிசீலனை, 17ல் நடக்கிறது. வரும், 19ம் தேதி, மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.வரும், 25ம் தேதி மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும். வரும், 27ல் முதல்கட்ட தேர்தலும், 30ம் தேதி


இரண்டாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. தேர்தல் முடிவு, ஜன., 2ல் வெளியாகிறது.

மாவட்டத்தில், திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 1,250 பதவிகளுக்கு, 27ம் தேதி தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 1,497 பதவிகளுக்கு, 30ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது.


'டிபாசிட்' தொகை எவ்வளவு?


ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய்; ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 600 ரூபாய்; மாவட்ட கவுன்சிலருக்கு, 1000 ரூபாய் 'டிபாசிட்' செலுத்த வேண்டும்.

எஸ்.சி., பொது மற்றும் பெண்களுக்கான பதவியாக இருந்தால், முறையே, 100, 300, 500 ரூபாய் 'டிபாசிட்' செலுத்தினால் போதும். ஓட்டுப்பதிவு மட்டும் இரண்டு கட்டமாக நடக்கிறது. மற்றபடி, வேட்புமனு, பரிசீலனை, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கை, பொதுவாக நடக்க

உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே, மாவட்ட அளவிலான உள்ளாட்சி தேர்தல் பணி மீண்டும் சுறுசுறுப்படைந்து உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X