| மழையிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை Dinamalar
மழையிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2019
08:25

பெ.நா.பாளையம்: வடகிழக்கு பருவமழையால், நெற்பயிர் மூழ்குவது உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க, பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் திருப்பதி அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழையால், பள்ளமான, வடிகால் வசதியற்ற நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சம்பா பருவத்தில் பல்வேறு நிலைகளிலுள்ள நெற்பயிர் பெரிதும் பாதிக்கும். அதனால், வடிகால் வசதியை ஏற்படுத்தி, நெற்பயிர் மூழ்காதபடி, தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதனால், வேர்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இளம் நெற்பயிர் கரைந்துபோக வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால், கரைந்துபோன இடங்களில் மீண்டும் நடவு செய்து, பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்கலாம். நெற்பயிரில் தண்ணீர் தேங்கினால் பிராணவாயு சரிவர கிடைக்காமல், வேர்களில் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். இதனால், பயிரைச் சுற்றியுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடு குறைந்துவிடும். மண் அதிகம் குளிர்ந்து விடுவதால், இயற்கையாக வெப்பம் குறைந்து, மண்ணில் மீண்டும் வெப்பமடைய கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். வெள்ளநீர் வடிந்தவுடன், தழைச்சத்து உரத்தை அமோனியா வடிவில் இடவேண்டும். அதாவது, யூரியாவை ஏக்கருக்கு, 25 கிலோவுடன், 20 கிலோ ஜிப்சம், 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து, வயலில் சீராக இடவேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையை மேலுரமாக தெளிக்கலாம். இதன்மூலம், புது இலைகள் துளிர்விட்டு செழிப்பாக வளரும். மணிச்சத்தை டி.ஏ.பி., உரம் மூலம், 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது, ஒரு ஏக்கருக்கு, 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, இரவு முழுதும் வைத்திருந்து, மறுநாள் காலை வடித்து, தெளிந்த நீருடன், 2 கிலோ பொட்டாஷ் உரத்தை, 190 லிட்டர் நீரில் கலந்து, காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X