மரத்தடியில் பாடம்; அடிப்படை வசதியும் இல்லை: குருவரெட்டியூர் பள்ளி மாணவர்கள் பாவம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
08:30

காடையாம்பட்டி: கழிப்பறை, சமையலறை, குடிநீர் என, எந்த வசதியுமின்றி, மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.


காடையாம்பட்டி, குருவரெட்டியூர், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், 153 மாணவ, மாணவியர், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கட்டடம் பழமையானது என்பதால், அதை பயன்படுத்தாமல், பல நேரங்களில் மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. அண்மையில் பெய்த மழையால், கழிப்பறை கட்டட சுவர் இடிந்து விழுந்து, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால், தினமும் அரை கி.மீ., தூரம் சென்று, ஆசிரியர்கள், குடத்தை சுமந்து வரும் அவலம் உள்ளது. இதுதவிர, சமையலறை கட்டடம் இல்லாததால், மரத்தடியில் அட்டை வேய்ந்த மேற்கூரையின் கீழ் சமைக்கப்படுகிறது. இதனால், உரிய அடிப்படை வசதியின்றி, மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மழைக்காலம் என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் அமலா கூறுகையில், ''காடையாம்பட்டியில், 15க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், பழமையான வகுப்பறை கட்டடங்களை இடிக்கக்கோரி, பலமுறை பி.டி.ஓ., அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், உரிய நடவடிக்கையில்லை,'' என்றார்.


இதுகுறித்து, காடையாம்பட்டி பி.டி.ஓ., மலர்விழி கூறுகையில், ''இடிக்க வேண்டிய கட்டடங்கள் குறித்து, பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்கள் வழங்கும் மதிப்பீடு மூலம், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ள உள்ளோம். ஊராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறு மூலம், பள்ளிக்கு தண்ணீர் வழங்க, சமையலறை கட்ட உள்ளிட்ட அடிப்படை வசதி மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X