திருமணமானவர் 17 வயது செவிலியருடன் மாயம்: மகளிர் போலீஸ் விசாரணையால் மனமுடைந்த நண்பர் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
10:08

பனமரத்துப்பட்டி: திருமணமாகி, குழந்தைக்கு தந்தையாகியுள்ள வாலிபர், 17 வயது செவிலியருடன் மாயமான வழக்கில், அவரது நண்பரை மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, வீடு திரும்பிய அவர், மனமுடைந்து, கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 23; பாலிடெக்னிக்(டி.இ.இ.இ.,) முடித்த இவர், வேலை தேடி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 22. இருவரும் நண்பர்கள். சீனிவாசனுக்கு திருமணமாகி, மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இந்நிலையில், சேலத்திலுள்ள, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த, 17 வயது செவிலியருடன், சீனிவாசன் கடந்த வாரம் மாயமானார். இதுகுறித்து, சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், திப்பம்பட்டி வந்த மகளிர் போலீசார், சீனிவாசன் குறித்து விசாரிக்க, சதீஷ்குமாரை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். இரவு, 11:00 மணிக்கு வீடு திரும்பிய சதீஷ்குமார், மனவேதனையுடன் இருந்தார். நேற்று காலை, பெற்றோர், அரளிப்பூ பறிக்கும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தூக்கிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார். இறக்கும் முன், அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், 'என் நண்பர், ஒரு பொண்ணை கூட்டிட்டு போனதுக்கு, நான் அனுப்பி வச்சதா சொல்றாங்க. அவனேதான், அந்த பொண்ணை கூட்டிட்டு போனான். ஆனாலும், என்ன தான் தப்பு சொல்றாங்க. எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. நா போறேன்' என, எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை பெருமாள் உள்ளிட்ட உறவினர்கள், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகாரளித்தனர். டி.எஸ்.பி., உமாசங்கர் உள்ளிட்ட போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


இதுகுறித்து, சதீஷ்குமாரின் உறவினர்கள் கூறியதாவது: எந்த தப்பும் செய்யாத சதீஷ்குமாரை, டவுன் மகளிர் போலீசார் மிரட்டினர். நாளையும்(இன்று), சேலம் மகளிர் ஸ்டேஷனுக்கு வர அறிவுறுத்தினர். அங்கு செல்லவே பயமாக உள்ளதாக, சித்தப்பா முருகன் உள்ளிட்ட உறவினர்களிடம், சதீஷ்குமார் தெரிவித்தார். மேலும், சீனிவாசன் குறித்து கேட்டு, மகளிர் போலீசார் மிரட்டி தொந்தரவு கொடுத்தனர். மனஉளைச்சலால், சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு காரணமான போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சம்பவத்தையடுத்து, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டியில், போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X