ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் மனைவியுடன் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:42

நெய்வேலி : நெய்வேலியில், ரஜினி ரசிகர் மன்ற தலைவரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கடலுார் மாவட்டம் நெய்வேலி வட்டம் 21ஐ சேர்ந்தவர் ரஜினி முருகன்,41. ஆட்டோ ஓட்டுநரான இவர், நெய்வேலி நகர ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தார். தற்போது என்.எல்.சி., பாதுகாப்பு படையில் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி.32. இருவரும் காதலித்து, 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர்.




குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை, வீடு திறந்து கிடந்ததால், உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் துாக்கில் பிணமாக தொங்கி உள்ளனர்.இது குறித்து தகவலின் பேரில், தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் இருவரின் உடல்களையும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X