போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
02:16

பாட்டி 'சுட்ட' நகை



மதுரை: சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி 50. உறவினர் வீட்டு திருமணத்திற்காக தனியார் பஸ்சில்மதுரைக்கு வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பாட்டி ஒருவரிடம் கைப்பையை வைத்திருக்குமாறு கூறினார். மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டிற்கு வந்ததும் பையை பெற்றுக்கொண்டார். கடையில் மிக்சர் வாங்கியதற்கு பணம் கொடுப்பதற்காக பையை திறந்து பார்த்தபோது 5 பவுன் எடையுள்ள நெக்லஸ், 3 பவுன் தங்க செயின் திருடப்பட்டிருந்தது. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



146 பவுன் நகை மோசடி



மதுரை: தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் சலாம். நகை பட்டறை வைத்து உள்ளார். கழிவு தங்க துகள்களை இவரிடம் மும்பை அஸ்லாம் ேஷக் 65, உட்பட 7 பேர் விலை பேசி வாங்குவது, 146 பவுன் மதிப்புள்ள தங்கதுகள்களை அடங்கிய பைகளை எடுத்துக்கொண்டு 'எஸ்கேப்' ஆயினர். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.



ஆன்லைன் மோசடி



மதுரை: ஒத்தக்கடை பாரதி நகர் சாய்ராம். இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட லாவண்யா ரகுநாத், பூர்ணிமா, ரிஷ்வானா ஆகியோர் 'டீரிம் வேர்ல்டு' கம்பெனியின் பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடர்ந்து வற்புறுத்தினர். இதைதொடர்ந்து ரூ.20 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி ஏமாந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.



வாலிபர் தற்கொலை



உசிலம்பட்டி: இப்பகுதி சத்யா நகர் மணி மகன் கார்த்திக் 25. கட்டட சென்ட்ரிங் தொழிலாளி. சில நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்தவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



எஸ்.பி., ஆய்வு



அலங்காநல்லுார்: இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., மணிவண்ணன் ஆய்வு செய்து, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பி., ஆனந்த ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் நிதிக்குமார்,எஸ்.ஐ.,க்கள் செந்தில்குமார், ஜெயராமன் உடனிருந்தனர்.



திட்டமிட்ட 7 பேர் கைது



சோழவந்தான்: காடுபட்டி எஸ்.ஐ., ஜெகதீஸ்வர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மன்னாடிமங்கலம் மயானம் அருகே திருட்டில் ஈடுபட திட்டம் தீட்டிய மேலக்கால் வினோத் 36, விக்கிரமங்கலம் சுரேஷ் 40, அறிவழகன் 56, கள்புளிச்சான்பட்டி ரமேஷ் 33, கடவுள்பாண்டி 43, மன்னாடிமங்கலம் முத்து 54, ஆறுமுகம் 53, ஆகியோரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.



நகைகள் திருட்டு



திருமங்கலம்: முகம்மதுஷாபுரம் பிஸ்மில்லாகான் மனைவி நசீபா பேகம் 48. இவர்களது மகளுக்கு போட்டோ எடுத்துவிட்டு, நகைகளை வீட்டின் அலமாரியில் வைத்துவிட்டு துாங்கினர். நேற்று அதிகாலை பார்த்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் அலமாரியில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.



மனுநீதி முகாம்



பேரையூர்: போலீஸ் சார்பில் மனுநீதிநாள் முகாம் எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவுபடி ஏ.டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் பேரையூரில் நடந்தது. டி.எஸ்.பி., மதியழகன் முன்னிலை வகித்தார்.ஏ.டி.எஸ்.பி., கூறியதாவது: மனுநீதிநாள் முகாமில் ஆயிரம் மனுக்களுக்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளது. முகாமிற்கு வரமுடியாதவர்கள் இம்மாத இறுதியில் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு வரலாம் என்றார். காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, ஜெயப்பிரியா கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X