தற்கொலை, பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
03:04

வடமாநில தொழிலாளி மரணம்


வேளச்சேரி: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர், அஜிஜில் கான், 35. மடிப்பாக்கம், ராம் நகரில் உள்ள பிரியாணி கடையில் பணி புரிந்தார். நேற்று, கடையில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி, சைக்கிளில் சென்றார்.கைவேலி அருகில் சென்றபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி, அஜிஜில்கான் பலியானார். இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வேளச்சேரியைச் சேர்ந்த ஹேமந்த் குமார், 21, காயமடைந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


மூதாட்டி தற்கொலை


கே.கே.நகர்: கே.கே.நகரைச் சேர்ந்தவர், சுப்ரமணியம், 70. இவர், வடபழநி முருகன் கோவிலில், உதவி அர்ச்சகராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிரேமா, 61. நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், பிரேமாவிற்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.


பொறியாளர் துாக்கிட்டு தற்கொலை


மாம்பலம்: தி.நகர், வெங்கட் நாராயண சாலையைச் சேர்ந்தவர், சூசன், 30. பொறியாளர். இவர், தன் தந்தை வெங்கட ரங்கன் என்பவருடன் சேர்ந்து, கட்டுமான வேலை செய்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளைச்சலில் இருந்த சூசன், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


மாடியில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு


செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுாரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. அதில், 13வது மாடியில், விளம்பர பலகை கட்டும் பணி, நேற்று நடந்தது. பீஹாரைச் சேர்ந்த பூசன், 35, என்பவர், பலகை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி, தரையில் விழுந்து பலியானார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு


மாங்காடு: வேலுார், சின்னபள்ளிகுப்பத்தைச் சேர்ந்தவர், சதீஷ், 30; கட்டுமான தொழிலாளி. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தங்கி, மவுலிவாக்கத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று தளம் போடுவதற்காக, முதல் தளத்தில் இருந்து, ஈரமான பலகைகளை வாங்கி வைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X