6 சவரன் நகை, 'அபேஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
03:08

சென்னை: வேப்பேரி பிரதான சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர், ரித்தேன்தர் குமார் முனோத். இவர், எழும்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இவரது வீட்டில், ரித்தேன்தர் குமார் முனோத் மகனின் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. நள்ளிரவு, 1:00 மணிக்கு, படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, 6 சவரன் நகை மாயமானது தெரிய வந்தது. இதுதொடர்பாக, வீட்டு வேலைக்கார பெண் உட்பட, மூன்று பேரிடம், வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


பிக்பாக்கெட் அடித்தவர் கைது


கே.கே.நகர்: நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர், முத்துமாரியப்பன், 32. இவரது மனைவி, பிரதீபா, 28. முத்துமாரியப்பன், சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். கே.கே.நகர், பொன்னம்பலம் சாலையில் உள்ள, அய்யப்பன் கோவிலில் வைத்து, 6ம் தேதி, மலைக்கு செல்ல கட்டு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.அங்கு வந்த மர்ம நபர், பிரதீபாவின் கைப்பையை திருடி சென்றார். அதில், 1,000 ரூபாய் இருந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்ட, காரம்பாக்கம், அருணாச்சலம் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 47, என்பவரை கைது செய்தனர்.


வீட்டில் மொபைல் திருட்டு


புளியந்தோப்பு: புளியந்தோப்பு, ஜாபர் தெருவைச் சேர்ந்தவர், ஜீனத், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் கணவருடன், வீட்டு கதவை திறந்து வைத்தபடி, நேற்று முன்தினம் இரவு துாங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, அவரது மொபைல் போனை திருடி தப்பினர். நேற்று அதிகாலை கண்விழித்தபோது, மொபைல்போன் மாயமானது தெரிய வந்தது. புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.வழிப்பறி செய்தவர் சிக்கினார்அடையாறு: அடையாறு, இந்திரா நகரில் கோபால், 18, என்பவர், பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரிடம், அடையாறு, கெனால்பேங்க் சாலையைச் சேர்ந்த பிரபு, 25, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பணம் பறித்துள்ளார். அடையாறு போலீசார், நேற்று, பிரபுவை கைது செய்தனர்.


தம்பதிக்கு, '‛குண்டாஸ்'


துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், சூளை மாநகரைச் சேர்ந்த சிதம்பரம், 26. மனைவி ஜோதி, 24. இரண்டு பேரும் சேர்ந்து, வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்தனர். துரைப்பாக்கம் போலீசார், கடந்த மாதம், இவர்களை கைது செய்து, 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


நகை பறித்தோருக்கு, 'காப்பு!'


ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகரைச் சேர்ந்தவர், ருக்மணி, 80. நவ., 30ம் தேதி, வீட்டுமுன் நின்ற இவரிடம், இரண்டு பேர், 4 சவரன் நகை பறித்தனர். ஆதம்பாக்கம் போலீசார் விசாரணையில், முடிச்சூரைச் சேர்ந்த குமார், 19, சுரேஷ், 32, என தெரிந்தது. நேற்று, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், 4 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X