1 ரூபாய் கட்டணத்தில் மின்சார ஸ்கூட்டர் வசதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
03:10

சென்னை:ஆலந்துார் மெட்ரோ நிலையத்தில், நிமிடத்திற்கு, 1 ரூபாய் கட்டணத்தில், பயணியருக்கு மின்சார ஸ்கூட்டர் வாடகைக்கு விடப்படுகிறது.


சென்னை, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணியர், நிலையத்தில் இருந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்வதற்கு ஏதுவாக, ஆலந்துார் மெட்ரோ நிலையத்தில், நிமிடத்திற்கு, 1 ரூபாய் கட்டணத்தில், மின்சார ஸ்கூட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மெட்ரோ நிர்வாகம், இவ்வசதியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த மின்சார ஸ்கூட்டர்களை, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, பயணியர் பயன்படுத்தலாம்.மணிக்கு, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை, கூகுள் பிளே ஸ்டோரில், 'பிளை ரென்டல்ஸ்' என்ற மொபைல் போன் செயலி வாயிலாகவும் செலுத்தலாம்.


இந்த ஸ்கூட்டரை, பயணியர் ஆலந்துாரில் எடுத்தாலும், அருகில் உள்ள, எந்த மெட்ரோ நிலையத்திலும் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.தற்போது, ஆறு ஸ்கூட்டர்கள் பயணிருக்காக வைக்கப்பட்டுள்ளன. பயணியரின் வரவேற்பையொட்டி, ஸ்கூட்டர் எண்ணிக்கையை, 15 ஆக உயர்த்த திட்டம் உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-டிச-201904:06:47 IST Report Abuse
PANDA PANDI திட்டம் நன்றே. மாவீரர்கள் ஆட்டையை போடாமல் இருந்தால் சரிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X