முகத்துவாரம் திறப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
03:39

பழவேற்காடு:பழவேற்கடு ஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, 1.40 கோடி ரூபாயில், துார்வாரப்பட்ட முகத்துவாரம் நேற்று திறந்து விடப்பட்டதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


பழவேற்காடு முகத்துவாரம், 1.40 கோடி ரூபாயில் துார் வாரும் பணிகள், கடந்த, ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 'டிரஜ்ஜர்' இயந்திரம் மூலம், துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.ஏரிப்பகுதியில் இருந்து, கடற்கரை வரை, 600 மீட்டர் நீளம், 120 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழத்திற்கு மணல் திட்டுக்களை, தண்ணீருடன் உறிஞ்சி கரைப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டன. கடந்த, மூன்று மாதங்களாக முகத்துவாரம் துார் வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. துார் வாரும் பணிகள் முற்றிலும் முடிந்து, நேற்று, முகத்துாரம் திறந்து விடப்பட்டது.


'டிரஜ்ஜர்' மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம், கடலும், ஏரியும் இணையும் பகுதியில் இருந்து மணல் வெட்டி எடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏரிநீர் கடலுக்கு ஆர்ப்பரித்து சென்றது.இதை மீனவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.


இது குறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது:தொடர் மழையால் பழவேற்காடு ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. இப்போது திறந்தால் தான் ஏரிநீர் கடலுக்கு செல்லும்போது, மணல் அடித்து செல்லபட்டு முகத்துவாரம் கூடுதல் ஆழத்தில் ஓடும்.இதை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதிகாரிகள், நேற்று, முகத்துவாரத்தினை திறந்துவிட்டு உள்ளனர்.'டிரஜ்ஜர்' மூலம் முகத்துவாரம் துார் வார வேண்டும் என்ற எங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால், சிலகாலம் நிம்மதியாக தொழில் செய்வோம்.துாண்டில் வளைவுகளுடன்கூடிய நிரந்தர முகத்துவாரம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அதுவும் எங்களது தொழிலுக்கு பெரும் பாதுகாப்பாக அமையும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X