மணல் கடத்திய இருவருக்கு 'காப்பு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
03:42

வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, சொக்காநல்லார் பகுதியில், ஏரியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஏரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி., வாகனம் மற்றும் டாடா டிப்பர் லாரி என, இரு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், ஜே.சி.பி., ஓட்டுனரான, அதே பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ், 29 மற்றும் லாரி ஓட்டுனர் சுரேஷ், 29, ஆகிய இரண்டு பேரை கைது செய்த வெள்ளவேடு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், லாரி மற்றும் ஜே.சி.பி., உரிமையாளர்கள் மீது, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


இருவர் மாயம்


திருவள்ளூர்: திருவள்ளூர், ஜே.என்.தெருவைச் சேர்ந்தவர், துரைசாமி, 45. இவரது மகன் விஸ்வா, 18. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வரும் இவர், கடந்த, 4ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் என, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து, திருவள்ளூர் நகர போலீசில், அவரது தந்தை துரைசாமி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


திருவள்ளூர், ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ், 48. இவரது மாமா நாராயணசாமி, 93, என்பவர், கடந்த, 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீசில், அருண் பிரகாஷ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மொபைல் போன் பறித்த மூவர் கைது


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, மா.பொ.சி., நகரைச் சேர்ந்தவர், வேலாயுதம், 35. கடந்த செப்டம்பர் மாதம், 20ம் தேதி, கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையோரம், அவர் நடந்து சென்றபோது, மூவர் வழிமறித்து மொபைல்போனை பறித்து சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட, குருவராஜகண்டிகை பயாஸ், 25, தண்டலச்சேரி சந்திரன், 19, சூரவாரிகண்டிகை ரவி, 19, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மேஸ்திரி தற்கொலை


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பவளவண்ணார் தெருவைச் சேர்ந்தவர், குமார், 30. மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், குடும்பத்தார், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டனர். இவர் மட்டும், வீட்டில் இருந்துள்ளார்.இரவு, குடும்பத்தார் வீட்டுக்கு சென்று பார்த்த போது, குமார் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


வழிப்பறியினர் கைது


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, பில்லாக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர், பூர்ணசந்திரா ராஜூ. நேற்றுமுன்தினம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இருந்து, பாத்தப்பாளையம் கிராமம் நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மிரட்டல் விடுத்து, 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், பெரியபாளையத்தான் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மேகனாதன், 20, ஆரணி தமிழ் காலனி பகுதியைச் சேர்ந்த அபினேஷ், 19, ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X