நெற்பயிரில் இலைகருகல் நோய் தடுக்க ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
04:27

காரைக்குடி:-மாவட்டத்தில் தற்போது நிலவும் பருவமழை, பனிமூட்டம், வெப்ப நிலை மாற்றத்தால் நெற்பயிர்களில் இலைக்கருகல் நோய் ஏற்படும் என செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மெர்டில் கிரேஸ், பரமசிவன் ஆகியோர் தெரிவித்தனர்.


அவர்கள் கூறியதாவது: நெற்பயிரில் பாக்டீரிய இலைக்கருகல் நோய் பாதித்தால், நாற்றுகள் மஞ்சளாகும். அதிக காற்று, உரமிடுதல், பாசனநீர், காற்றுடன் கலந்த மழையால் நோய் பரவுகிறது. இதை தடுக்க சரிவிகித உரமளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பமுத்து சாறு 5 சதவீதம் தெளிக்க வேண்டும் அல்லது 'ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட', 'டெட்ராசைக்லின்' கலவை 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு எக்டேருக்கு 125 கிலோ கலந்து தெளிக்க வேண்டும் அல்லது எக்டேருக்கு 5 கிலோ பிளிச்சிங் பவுடரை பாசனநீருடன் கலந்துவிடலாம்.பயிரில் இலைகள் மேல் வெண்மை, சாம்பல் நிற மைய பகுதியில் புள்ளி போன்று குலைநோய் தாக்கும். இதை தடுக்க தலைச்சத்து உரத்தை 3 ஆக பிரித்து தெளிக்க வேண்டும். காலை 11:00 மணிக்குள்ளும், மாலை 3:00 மணிக்கு மேல் தான் இதை தெளிக்க வேண்டும். 'டிரைசைக்கலசோல'யை ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் வீதம் கலந்து அல்லது 'கார்பன்டாசிம்'யை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு என்ற விகித்தில் கலந்து தெளிக்கலாம். நாற்றங்கால் துார் வைக்கும் பருவம், கதிர் வெளிவரும் பருவத்தில் 34 முறை தெளிக்க வேண்டும்.


நெற்பயிரை தாக்கும் இலைமடக்குப்புழுவால் மகசூல் வெகுவாக பாதிக்கும். இப்புழுவை ஒழிக்க தழைப்பருவத்தில் 10 சதவீதம் இலைச்சேதம் மற்றும்பூக்கும் பருவத்தில் 5 சதம் கண்ணாடி இலை சேதம் ஏற்படும்.இதற்கு சரிவிகித உரமிட்டு, வயலில் களை எடுக்க வேண்டும். நெல் அறுவடைக்கு பின் வயலை உழுது, தண்ணீர் தேங்கவிட வேண்டும். மறுதாம்பு விடுவதை தவிர்க்கவும்.எக்டேருக்கு 25 கிலோ வேப்பங்கொட்டை சாறு அல்லது 3 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.மேலும் 'குளோரான்டிரானிலிபுரோல்' 18.5 சதவீதம் எக்டேருக்கு 150கிராம் அல்லது 'புளுபெண்டையமைடு எக்டேருக்கு 150 கிராம்.இவற்றில் ஏதேனும் பூச்சிகொல்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம், என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X