இடியும் நிலையில் பள்ளி கட்டடம்: அகற்றுவதில் குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
05:07

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே மிகவும் பழமையான பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே அவுட்டில், தனியார் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்தனர். நகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கால் இந்த விபத்து நடந்துள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் இதுமாதிரி உள்ள சுவர்களை இடிக்கும்படி, அரசு உத்தரவிட்டது. ஆனால் காரமடை அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மிகவும் பழைமையான அரசு பள்ளி கட்டடம் விழும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை யார் இடிப்பது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரமடையை அடுத்த கா.புங்கம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்தில் ஊர் பொது மக்கள் ஒன்று கூடி, 1935ம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டினர்.கடந்த 1985ம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் இக்கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. அதன் பின் வேறு இடத்தில் புதிதாக பள்ளி கட்டடம் கட்டி, இடமாற்றம் செய்தனர்.பயன்பாடு இல்லாமல் இருந்த, பழைய பள்ளிக்கட்டடத்தின் மேற்கூரை, கடந்தாண்டு பெய்த கனமழையால், இடிந்து விழுந்தன. கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இந்த கட்டடத்தின் சுவர்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.பொது மக்கள் கூறுகையில், 'பள்ளிக் கட்டடம் இருப்பது கோவிலுக்கு சொந்தமான இடம். இந்த சுவர்கள் உறுதி தன்மையற்ற நிலையில் உள்ளன. இரு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், யாரிடம் கட்டடத்தை இடிக்கும்படி கூறுவது என தெரியவில்லை.'ஆனால், உடனடியாக இடிக்கவில்லை என்றால், அடுத்து ஒரு மழை பெய்தால் சுவர் இடிந்து வீடுகள் மீது விழ வாய்ப்பு உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம், பழைய கட்டடத்தின் சுவர்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறுகையில், ''பழைய பள்ளிக் கட்டடம் இருப்பது, கோவிலுக்கு சொந்தமான இடம் என்றாலும், கட்டடம் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமானது. அதனால் காரமடை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோவில் நிர்வாகம் சார்பில், கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X