மழையால் சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க ரூ.240 கோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
05:49

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பள்ளிகளைச் சீரமைக்கவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 240 கோடி ரூபாய் தேவைப்படும், என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.



மாவட்டத்தில் 1,532 பள்ளிகள் உள்ளன. வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் 233 பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 472 பள்ளிகளில் வகுப்பறைகள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.அவற்றில் வகுப்புகள் நடத்தக் கூடாது, என முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணி, இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழுமையாகத் தண்ணீர் தேங்கியுள்ளது.நாகநாதபுரம் பள்ளி வளாகத்தில் மேற்கூரையின் சிறிய பகுதி இடிந்த நிலையில் அதை உடனடியாக அகற்றினர்.மண்டபம் பகுதியில் பெரும்பாலான பள்ளிகளைச் சுற்றிலும், உள்ளேயும் மழை நீர் தேங்கியுள்ளது.மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும் அவை வெளியேற வழியின்றி இருப்பதால் தண்ணீரை அகற்ற முடியாத நிலை உள்ளது.


ஆகவே சூழலுக்கு ஏற்ப வகுப்பறைகளை நடத்தவோ, விடுப்பு அறிவிக்கவோ தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார்.பருவ மழைக்கு சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்கவும், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் 240 கோடி ரூபாய் தேவைப்படும் என கட்டடங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழுவினரும், பொதுப்பணித்துறையினரும் தெரிவித்தனர்.இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X