| அறுவடைக்கு தயார் நிலையில் சோளம் Dinamalar
அறுவடைக்கு தயார் நிலையில் சோளம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2019
05:52

கமுதி:கமுதி பகுதியில் தொடர்மழையால் சோள கதிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கமுதி அருகே பேரையூர், சின்னஆைனையூர், பாக்குவெட்டி, கருங்குளம், கள்ளிக்குளம், செங்கப்படை, புதுக்கோட்டை, காத்தனேந்தல், கொம்பூதி, நெறிஞ்சிப்பட்டி, இடைச்சியூரணி உட்பட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், நெல், பருத்தி, மிளகாய் விவசாயத்தை தவிர்த்து, வறட்சி பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு குதிரைவாலி பயிர்களை விவசாயம் செய்ய துவங்கினர். குறைந்த தண்ணீர் தேவைப்படும் கோ ரக சோள பயிர்களை பயிர் செய்திருந்தனர். தொடர்ந்து பெய்த கனமழையால் குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கும் வகையில் சோள பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நாட்டு சோளத்தை காட்டிலும் அதிக எடை அளவு கோ ரக சோளத்தில் கிடைத்து. கிலோ 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X