மேம்படுத்தப்படாத மலைவாழ் குடியிருப்பு: அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
07:02

உடுமலை;குடியிருப்பிலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி கட்டடத்தையும், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், கடந்த, 1972ம் ஆண்டு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமூர்த்திமலைக்கு இடம் பெயர்ந்தனர். திருமூர்த்தி அணை படகுத்துறை எதிரில், அரசு சார்பில், கடந்த, 1984 ம் ஆண்டு, 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால், குடியிருப்பில், பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.நீண்ட இழுபறிக்குப்பிறகு, தளி பேரூராட்சி சார்பில், குடியிருப்புக்கு குடிநீர் வசதி மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிற வசதிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.சரிவான பகுதியில், மண் சுவர் கொண்ட வீடுகளில், அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில், சுவர்கள் வலுவிழந்து, அச்சுறுத்துகிறது. குழந்தைகளும், முதியவர்களும் நடக்க முடியாத அளவுக்கு, தெருக்கள் மாறிவிடுவதால், ஆண்டு முழுவதும் அவதிப்படுகின்றனர்.அச்சுறுத்தும் பள்ளி கட்டடம் மலைவாழ் கிராம குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அங்கு செயல்படுகிறது. ஆனால், பள்ளிக்கட்டடம், படுமோசமான நிலையில், பராமரிப்பு இல்லாமல், உள்ளது.கட்டடத்தின் மேற்கூரை சிதைந்து, ஒரு வகுப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சத்துணவு தயாரிப்பதற்கான அறையும், இடிந்து காணப்படுகிறது. படிக்கட்டு முதல் வகுப்பறை வரை அனைத்து கட்டமைப்புகளும், சிதிலமடைந்தும் மேம்பாட்டு பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.தங்கள் குடியிருப்பில், பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, தெருக்கள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளையும், மேம்படுத்த பல ஆண்டுகளாக போராடியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பு மக்கள் வேதனையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X