| 'உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற ஆளும் கட்சி முயற்சி' Dinamalar
'உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற ஆளும் கட்சி முயற்சி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2019
10:09

அரூர்: ''உள்ளாட்சி தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில், ஆளும்கட்சி ஈடுபட்டு வருகிறது,'' என, தினகரன் குற்றம் சாட்டினார்.



தர்மபுரி மாவட்டம், அரூரில் நேற்று, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வார்டு வரையறை, இட ஒதுக்கீடு ஆகியவற்றை சரியாக செய்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் சிறப்பானதாக இருக்கும். ஊரக பகுதிகளுக்கு மட்டும், இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தி, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், ஆளுங்கட்சி உள்ளது. தேர்தலை முறையாக நடத்தக்கோரி, எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றால், அ.ம.மு.க.,வும் செல்லும். இடைத்தேர்தலில் பண பலத்தால், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.


எவ்வளவு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஐதராபாத்தில், பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், சட்டத்தை போலீஸ் கையில் எடுத்துக் கொண்டது தவறாக இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் மூலம், பயம் வருவதுடன் கொடுங்கோலர்கள் நிறுத்துவர். பெண்கள் மீது, பெற்றோர் தனி கவனம் செலுத்துவது போல், ஆண் பிள்ளைகள் மீதும், கவனம் செலுத்தினால் பாலியல் வன்கொடுமை குறையும். பொள்ளாச்சி விவகாரத்தில், தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில், அ.ம.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X