17 இடங்களில் கைவரிசை காட்டிய 'கில்லாடி' கைது: சுவாமி சிலை, நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
10:13

சேலம்: சேலத்தில், 40 நாட்களில், 17 இடங்களில் கைவரிசை காட்டியவரை, சுற்றிவளைத்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து முருகன் சிலை, நகை, பணம், வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


சேலம் மாநகரில், இரும்பாலை, சூரமங்கலம், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அண்மையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து, கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அவர்கள், சூரமங்கலம், பள்ளப்பட்டியில் திருட்டு நடந்த வீடுகள், கடைகளை ஒட்டிய பகுதிகளிலுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது ஓமலூர், பாகல்பட்டி, செல்லப்பிள்ளைக்குட்டையை சேர்ந்த அய்யந்துரை, 48, என தெரியவந்தது. அவரை, கண்காணித்து வந்த தனிப்படையினர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஓமலூரில் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் கடந்த அக்டோபரில், கோவை சிறையிலிருந்து ஜாமினில் வந்த அய்யந்துரை, 40 நாட்களில் பள்ளப்பட்டி, இரும்பாலை, சூரமங்கலம், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 17 இடங்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து, இருசக்கர வாகனங்கள் ஆறு, 10 பவுன் தங்க நகை, அம்மன், முருகன் சிலைகள், 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


இதுகுறித்து, துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: சிறையிலிருந்து வெளியே வந்த, 40 நாட்களில் தினமும் ஒரு வீட்டை, 'குறி' வைத்து திருடி வந்தார். பிடித்த மொபட்டுகளை திருடி, அதில் சுற்றி வந்துள்ளார். நாய்களுக்கு சில்லி சிக்கன், முட்டை பொரியலை போட்டு, வசப்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு தெரியவில்லை. அதை, ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X