உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது! விண்ணப்ப மனு வாங்க ஏராளமானோர் குவிந்தனர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
20:28

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று துவங்கியது. விண்ணப்பம் வாங்க ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் குவிந்தனர்.



தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி அன்று 2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் முதல் கட்டத்தேர்தலில், 7 ஒன்றியங்களில் 3,165 பதவிகளுக்கு நடக்கிறது.மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை துவங்கியது.



கடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகிய பதவிகளுக்கு கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனு பெறப்படுகிறது.சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர் வேட்பு மனு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்ப படிவம் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இதை வாங்குவதற்காக கடலுாரில் நேற்று வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களுடன் குவிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இம்மாதம் 16ம் தேதி கடைசி நாளாகும். மறு நாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அலுலவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.



போட்டியிடுவதற்கான தகுதிகள்


நடப்பு சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் அப்பகுதி தொடர்புடைய கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியுடையவர்கள். போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில், வேட்பாளர் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.



விருத்தாசலம்உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பெற வேட்பாளர்கள் குவிந்ததால், விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 ஊராட்சிகளில் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பப் படிவம் வழங்குவது, பூர்த்தியான விண்ணப்பங்களை பெற தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.பி.டி.ஓ.,க்கள் ஜெயகுமாரி, சுந்தரம் தலைமையில் துணை பி.டி.ஓ.,க்கள் அடங்கிய அலுவலர்கள் குழு, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில், வேட்புமனுக்களை பெற நேற்று காலை 9:00 மணி முதல், கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் ஆதவாளர்களுடன் வந்திருந்தனர். அவர்கள் பலரும், வேட்புமனுக்களை போட்டி போட்டுக் கொண்டு பெற்று சென்றதால், ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ஒன்றிய அலுவலக வளாகத்தில் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 41 ஊராட்சிகளில், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 18 ஒன்றிய கவுன்சிலர்கள், 41 ஊராட்சி தலைவர்கள், 306 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திலேயே, வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கு, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகள் சிவஞானம், அசோக்பாபு ஆகியோர் வழங்கினார்.தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு பதவிகளுக்கு, அதிகளவில் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.



பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் அமுதா, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.புவனகிரி மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நேற்று மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர்.மேல்புவனகிரி ஒன்றியத்தில் 47 ஊராட்சி தலைவர்கள், 15 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் 324 வார்டு உறுப்பினர்கள் பதவிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர், 45 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 297 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளது.நேற்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. மேல் புவனகிரி ஒன்றியம் மேலமணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, மேலமணக்குடியை சேர்ந்த இருவரும், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒருவரும் மனு அளித்தனர். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மேல் புவனகிரி மோகன்ராஜ், கீரப்பாளையம் பாலக்கிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X