| எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் Dinamalar
எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2019
20:35

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.டெல்பி டி.வி.எஸ்., கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி சங்கீதா மற்றும் குழுவினர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதில் இ.சி.இ., இ.இ.இ., மற்றும் மெக்கானிக் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 58 பேர் பங்கேற்ற இம்முகாமில் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் ஆக்ட் பிளாஸ்ட் பிரைவேட் லிட்., மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் செந்தில்வேல், சுரேஷ் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். அதில் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 40 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி சேர்மன் கதிரவன் பாராட்டினார். கல்லூரி முதல்வர் ஆனந்தவேல், பாலிடெக்னிக் முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் உடனிருந்தனர்

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X