இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
20:36

திட்டக்குடி: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி, திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திட்டக்குடி அடுத்த சிறுமுளை, பெருமுளை, வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம், புதுக்குளம், நாவலுார், மேலுார், மருதத்துார், குமாரை, நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்ட மக்காசோளம், பருத்தி, கேழ்வரகு பயிர்கள், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம், பருத்திக்கு ரூ. 22 ஆயிரம், கேழ்வரகுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள், நேற்று, தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வெலிங்டன் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மருதாசலம் தலைமையில் சாத்தநத்தம் பொன்னுசாமி, ஆதமங்கலம் பரமசிவம், வையங்குடி ஆதிமூலம், பூபதி, வரதன் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X