| தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதித்தவர்கள் எஸ்.பி.,யிடம் புகார் Dinamalar
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதித்தவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2019
20:39

கடலுார்: தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.இது குறித்து முதுநகரை சேர்ந்த அஞ்சுகம்,49: உள்ளிட்டோர் எஸ்.பி.,யிடம் கொடுத்துள்ள மனு:கடலுார் முதுநகர் பகுதியில் வசித்து வருகிறோம். பச்சையாங்குப்பம் ஹவுசில் போர்டு குடியிருப்பில் வசித்து வரும் சிவகாமி , கதிர், தேன்மொழி ஆகியோர் கடந்த தீபவாளிக்கு முன், 2 கிராம் தங்க காசு உள்ளிட்ட பொருட்கள் தருவதாக கூறி, மாதம் 600 ரூபாய் வீதம் 65 பேரிடம் தீபாவளிக்கு சீட்டு பிடித்தனர்.தீபாவளிக்கு சில மளிகை பொருட்களை மட்டும் வழங்கிவிட்டு, தங்கம் விலை ஏறிவிட்டது. அதனால் தலா 6 ஆயிரம் ரூபாய் பணம் தந்து விடுகிறோம் என கூறினர். தற்போது வரை தரவில்லை. சீட்டு நடத்தியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X