10 வார்டுகளில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு 'சுத்தமா' ஆளில்லை! அதனால்தான் நிறைய பேருக்கு காய்ச்சல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 டிச
2019
06:50
பதிவு செய்த நாள்
டிச 10,2019 01:50

கோவ:நகரை துாய்மையாக பாதுகாக்க, 'அந்த திட்டம்; இந்த திட்டம்' என்றெல்லாம் பேசும், கோவை மாநகராட்சி நிர்வாகம், 10 வார்டுகளுக்கு சுகாதார ஆய்வாளர் நியமிக்காததால், துப்புரவு பணி முடங்கியிருக்கிறது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. 18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2 லட்சம் மக்கள், பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.


மொத்தம், 100 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு ஒருவர் வீதம், 100 சுகாதார ஆய்வாளர்கள் நியமித்தால் மட்டுமே, 100 சதவீதம் துப்புரவு பணியை மேற்கொள்ள முடியும்.ஆனால், தற்போது, 20 சுகாதார ஆய்வாளர்களும், 5 மண்டல சுகாதார அலுவலர்களுமே பணியில் இருக்கின்றனர். அதனால், ஒரு சுகாதார ஆய்வாளருக்கு குறைந்தபட்சம், 3 வார்டுகள், அதிகபட்சம், 7 வார்டுகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.இதேபோல், 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம், வார்டுக்கு, 3 பேர் நியமிக்க வேண்டும். ஒட்டுமொத்த மாநகராட்சிக்கு, 300 பேர் தேவை. ஆனால், 75 பேரே பணியில் இருக்கின்றனர்.அதனால், சில வார்டுகளில் துப்புரவு தொழிலாளியையே, மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர்.


துாய்மை பாரதம் திட்டத்தில், கோவைக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது.பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், சுகாதாரப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வீதிகளில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது; ரோட்டில் பரவிக்கிடக்கிறது; துர்நாற்றம் வீசுகிறது.தற்போதுள்ள சூழலில், வடக்கு மண்டலம் - 4 வார்டு, கிழக்கு - 2, மேற்கு - 2, மத்திய மண்டலம் - 2 என, மொத்தம், 10 வார்டுகளில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இவ்வார்டுகளில் சுகாதாரப் பணி முடங்கியிருக்கிறது.


பல்வேறு காய்ச்சல்களால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் சுகாதாரத்தை பாதுகாக்க, மாநகராட்சி கமிஷனர் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.வடக்கு மண்டலம் - 4 வார்டு, கிழக்கு - 2, மேற்கு - 2, மத்திய மண்டலம் - 2 என, மொத்தம், 10 வார்டுகளில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக இருக்கிறது.


இவ்வார்டுகளில் சுகாதாரப் பணி முடங்கியிருக்கிறது.சுகாதாரத்தை பாதுகாக்கதனி துணை கமிஷனர்சுகாதார ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:* சுகாதாரம் பாதுகாக்க, தேவையான எண்ணிக்கையில் சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் நியமிக்க வேண்டும்.* மண்டல சுகாதார அலுவலர்கள், 20 வார்டுகளை கவனிக்கின்றனர்.


ஒரே நபரால், 20 வார்டுகளை சுற்றி வர முடியாது. அதனால், ஒருவருக்கு, 10 வார்டு என பிரித்து, மண்டலத்துக்கு, 2 சுகாதார அலுவலர்களை நியமிக்க வேண்டும்.* மண்டலத்துக்கு ஒரு உதவி நகர் நல அலுவலர் வீதம் நியமிக்க வேண்டும். துப்புரவு பணி மட்டுமின்றி, டெங்கு கொசு ஒழிப்பு, மழை நீர் தேங்காமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.* அதனால், சுகாதாரப் பணிகளை கண்காணித்து, வேலையை துரிதப்படுத்த, நகர் நல அலுவலருக்கு மேலாக, சுகாதாரப்பணிக்கென துணை கமிஷனர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X