அவிநாசி ரோட்டில் இப்படி வீணாகிறதே தண்ணீர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2019
02:15

பெட்ரோல் பங்க் நடைபாதையின் கீழ் குழாய் உடைப்பால் பகீர்

குப்பை தொட்டி கூடுதலாக தேவைமேட்டுப்பாளையம் ரோடு, சுப்ரமணியம்பாளையம் முத்தம்மாள் லே-அவுட் முதல் வீதியில், வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது.- லட்சுமி நாராயணன், முத்தம்மாள் லே-அவுட்.

அம்மன் குளத்தில் திறந்தவெளி கழிப்பிடம்அம்மன் குளம் கிழக்கு வீதியில், சாலையோரம் குவிந்துள்ள குப்பையால், இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது.- சக்தி, அம்மன்குளம்.

தெரு நாய் தொல்லை அதிகரிப்புசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, அசோக் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. - ஸ்ரீதர், கஸ்துாரி நகர்.

எல்.ஐ.சி., வளாகத்தில் ஆபத்தான மரம்அவிநாசி ரோடு, எல்.ஐ.சி.,வளாகத்தில் உள்ள மரம், வேருடன் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இந்த மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- ஜஸ்டின் திரவியம், பீளமேடு.

என்.எஸ்.ஆர்., ரோட்டில் குப்பை சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.,ரோடு, இந்தியன் வங்கி எதிரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி, நிரம்பி வழிகிறது.- பாலா, சாய்பாபா காலனி.

ஆபத்தான மரத்தை அகற்றணும்சேரன் மாநகர், அம்பாள் நகரில், சாலையோரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ள, பிரம்மாண்டமான வேப்பமரத்தை, அகற்ற வேண்டும்.-விஸ்வநாதன், அம்பாள் நகர்.

குழாய் உடைப்பால் தண்ணீர் வீண்அவிநாசி ரோடு, அண்ணாசிலை அருகே, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கை ஒட்டியுள்ள, நடைபாதையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள, குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாகிறது.-கவின்தனபால், பாப்பநாயக்கன்பாளையம்.

புதிய நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோடு, செல்லாண்டியம்மன் கோவில் அருகில் உள்ள சிதிலமடைந்துள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புது தொட்டி கட்ட வேண்டும்.- ரமேஷ்கிருஷ்ணா, சிங்காநல்லுார்.

சுகாதார சீர்கேடுசிங்காநல்லுார், வசந்தா நகர், ஜெய்சாந்தி தியேட்டர் சாலையில், அள்ளப்படாமல் குவிந்துள்ள குப்பை, காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.- மீனாட்சி, வசந்தா நகர்.

குடிநீர் குழாய் உடைப்புமேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கிழங்கு தோட்டம் பஸ் ஸ்டாப் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது.-அருண், தொட்டதாசனுார்.

சாக்கடை கால்வாய் அடைப்புதிருச்சி ரோடு - கிழக்கு கிளப் ரோடு திருப்பத்தில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; துார்வார வேண்டும்.- ரங்கநாதன், வைசியாள் வீதி.

வீணாகுது தண்ணீர்புரூக்பாண்ட் ரோடு, சிரியன் சர்ச் ரோட்டில் குழாய் உடைப்பால், தண்ணீர் சாலையில் வீணாக ஓடி, சாக்கடையில் கலக்கிறது. தண்ணீர் வீணாவது தடுக்க வேண்டும்.-சந்தோஷ், சிரியன் சர்ச் ரோடு.

பணியில் மெத்தனம்ஆவராம்பாளையம், ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியில், சாக்கடை கால்வாயில் எடுக்கப்பட்ட கழிவு மண் காய்ந்தும், இன்னும் அகற்றவில்லை.- ஜமுனா,

ஆவராம்பாளையம்.

பிரதான குழாய் உடைப்புகுறிச்சி, ஆண்டாள் தோட்டம் பகுதியில், பாதாள சாக்கடை பணிக்காக, குழி தோண்டும்போது, உடைந்த பிரதான குடிநீர் குழாயை இணைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமராஜ், குறிச்சி.

பள்ளி அருகில்குப்பை குவியல்மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, பாரதியார் ரோடு, மாநகராட்சி பள்ளி அருகில், குவிந்துள்ள குப்பை அள்ளப்படுவதில்லை.- முத்துகுமார், பழையூர்.

சாக்கடை கால்வாய் வசதி இல்லைகுனியமுத்துார், ஞானபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- ஜெயகுமார், குனியமுத்துார்.

ஆக்கிரமிப்பு வாகனங்களால் அவதிராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டின் இருபுறமும், ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- குமார், ராமநாதபுரம்.

.

மின் கம்பத்தை காணோம்நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூரில் குடியிருப்புகளுக்கு, மத்தியில் உள்ள, மின் கம்பம், செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது.- சரவணன், பூச்சியூர்.

போக்குவரத்துக்கு இடையூறுகோவை அரசு கலை கல்லுாரி சாலையில், நீதிமன்றம் முதல் எல்.ஐ.சி., சந்திப்பு வரை, மதிய நேரத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- செல்வராஜ், பீளமேடு.

தார் சாலை அமைக்க வேண்டும்மாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, மணியகாரம்பாளையம், நட்சத்திரா நகரில் தார் சாலை வசதி இல்லாததால், மழை நேரங்களில், மண் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.-செந்தில்குமார், மணியகாரம்பாளையம்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X