'குட் - பை' ! பூந்தமல்லியில் 25 ஆண்டு குப்பை பிரச்னைக்கு....'பயோ மைனிங்' முறையில் அகற்றி சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 டிச
2019
04:02
பதிவு செய்த நாள்
டிச 10,2019 02:24

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.


நகராட்சிக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது. அனைத்து வார்டுகளில் இருந்தும், நாள்தோறும், 21 டன் குப்பை சேகரமாகிறது. பூந்தமல்லி நகரம், பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே, பாரிவாக்கத்தில் உள்ள, 1.5 ஏக்கர் இடத்தில், குப்பை கொட்டப்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டதால், 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான குப்பை, மலை போல் தேங்கியது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.


அடிக்கடி தீயிட்டு எரித்ததால், புகை மூட்டம் அதிகமாகி, அருகேயுள்ள மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து, குப்பை கொட்டக்கூடாது என, எதிர்ப்பு எழுந்ததால், திருவேற்காடு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், 1.87 கோடி ரூபாய் செலவில், குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்ற திட்டமிடப்பட்டது. 2018 ஆகஸ்டில், இப்பணி துவங்கியது. 'பயோ மைனிங்' என்பது, எளிய அறிவியல் முறைப்படி, விரைந்து முடிக்கக்கூடிய தொழில் வடிவம். பணியாளர்கள், குப்பையை கிளறி, இயந்திரத்தில் கொட்டுவர். 'கன்வேயர்' மூலம் செல்லும் போது, பிளாஸ்டிக், இரும்பு, மெட்டல், மண் உள்ளிட்டவை தனித்தனியாக பிரியும். மண், கல், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் சிமென்ட் பைகள் தனியாக பிரிக்கப்படும்.


இதில், மக்காத குப்பையான பிளாஸ்டிக், துணி ஆகியவை, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இப்பணியின் போது, 'பயோ கல்சர்' முறையை பயன்படுத்தி, 'ப்ரீ பிராசசிங்' செய்யப்படுவதால், அருகே வசிக்கும் மக்களுக்கு, துர்நாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்படும். தற்போது, இப்பணி முடிந்து, குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குப்பையால் ஏற்பட்டு வந்த, சுகாதார பாதிப்புகளும் இனி இருக்காது. மீட்கப்பட்ட இடத்தில், குடிநீர் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, வார்டுகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், வீடுகளில் இருந்து, பிரித்து வாங்கப்படும் குப்பையில், மக்கும் குப்பையை, உரம் தயாரிக்க பயன்படுத்துவர். மக்காத குப்பை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.

-நகராட்சி அதிகாரிகள், பூந்தமல்லி.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilkumar - KARUR,இந்தியா
10-டிச-201915:22:46 IST Report Abuse
senthilkumar தயவு செய்து இதேபோல் திருவையாறில் உள்ள குப்பை கிடங்கை பாருங்கள் அங்குள்ள குப்பை கிடங்குக்கு பின்புறம் தான் மயானக் கொட்டகை உள்ளது இதன் அருகில் தான் தியாகராஜர் சமாதி உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X