காட்டம்பட்டி குளத்தில் அடர்வனம்: களத்தில் அசத்தும் தன்னார்வலர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2019
07:22

அன்னுார்:காட்டம்பட்டி குளத்தில் அடர்வனம் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காட்டம்பட்டியில், 240 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. இந்த குளமும், குளத்திற்கு மழைநீர் வரும் பாதையும், பராமரிப்பு இல்லாமல் இருந்தன. இதையடுத்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, குளத்தை துார்வார பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றது.தன்னார்வலர்கள் இணைந்து, ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று, துாய்மை பணி செய்து வருகின்றனர். குப்பையை அகற்றுதல், மழைநீர் வரும் பாதையில் மண் மேடுகள், புதர்களை அகற்றுதல் ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன.தன்னார்வலர்கள் குளத்தின் நீர்வழி பாதைகளை மீட்டதாலும் குளத்தை ஆழப்படுத்திய தாலும், தொடர்ந்து பெய்த மழையாலும், 240 ஏக்கர் குளத்தில், தற்போது, 80 ஏக்கர் பரப்பில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், குளத்தில், 'மியாவாக்கி' எனப்படும் அடர்வனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்கான இயற்கை உரங்கள் இட்டு, பாத்தி அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது.இதையடுத்து வரும், 22ம் தேதி, 500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இப்பணிக்கு, பொக்லைன் இயந்திரம் அல்லது உடலுழைப்பு தர விரும்புவோர், ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று காலை 7:00 மணிக்கு, குளத்திற்கு வரலாம். இதுதொடர்பாக, 80125 87774 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X